பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு துறைக் கோவை 13 L

یا حتي

படுதலைச் செய்யும்; புண்ணிய நாடு - நன்மை தழைத்த செம்பிநாடு: சேதுபுரந்தரன் - சேதுகாவலன், யாம் பண்ணிய நற்றவம் - நாம் செய்த நல்ல தவப் பயன் ஆவார்; கண்ணியர் - கண்ணிய மானவர்; 17ుu தனை தனம் கண்டும் - மலையளவான பெருஞ் செல்வத்தைச் சேர்த்து வைத்தும்; என்னே - என்ன பயன்; க ண் ணி ய ர ல் லி ர் - கண்னை யுடையவரல்லீர்; தனம் - முலை.

2 (39

வகுந்தன பாயனெப் பாவெங்குஞ் செய்த வரோதயனுட் புகுந்தனர் துஞ்சு வயற்செம்பி காடன் புலவருக்குத் தகுந்தன கல்குறுஞ் சீராச ராசன் றடவரைவாய் மிகுந்தன மென்பதுண் டோகை யினிற்கடன் மேயபின்னே.

வகுந்து - பகிர்ந்து, அனபாயன் - அனபாய சோழன்; வரோதயன் - வரத்தின் பயனாய்ப் பிறந்தவன்; அனம் - அன்னம்; துஞ்சு - உறங்கு கிற; தகுந்தனம் - ஏற்ற பல செல்வம்; கடன் கையினில் மேய பின் - கடனைக் கைப்பற்றிய பின்; மிகும் தனம் என்பது உண்டோ - மிகுந்த செல்வம் என்பது சிறந்து நிற்பது உண்டோ; சிறவாது என்ப தாம். கையினில் கடல் மேயபின்னே - கையில் கடல் போன்ற கண்னைப் பொருந்தியபின், அதாவது கண் ைண மறைத்தபின்: மிகும் தனம் என்பது உண்டோ - கதித்து வெளிப்படும் முலை என்பதனால் பயன் உண்டோ .

27 O

கழித்த2லப் புன்னேயி லன்னங் கருவென்று கண்மயங்கக் கொழித்தலை முத்தங் குவிக்குங் கடற்றுறைக் கொண்கனிசை செழித்தலை வேட்ட கொடைராச ராசன் றிரும2லவாய் விழித்தலை வேண்டினன் று.ாங்கலைத் தந்தனை மெல்லியலே. கழித்தலை - உப்பங்கழிக்கரை, கரு - முட்டை, புன்னைப்பூவைக் கண்ட அன்னம் அதனைத் தன் முட்டை என மயங்கியது. அன்னத்தின் முட்டைபோன்ற உருவினது புன்னைப் பூவாதலின். கண் மயங்க - கண்பார்த்து வியந்து மயங்கும்படி; கொழித்து அலை முத்தம் குவிக்கும் - அலையால் தள்ளி முத்துக்களைக் கரையில் கொண்டு வந்து குவிக்கும்: கொண்கன் - நாயகன், இசை செழித்தல் - புகழ் வளர்தல்; வேட்ட - விரும்பிய, விழித்தல் - கண் விழித்திருத்தல்: துரங்கல் - உறக்கம் :