பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 48. இராசராச சேதுபதி

அதில் நீர் வரவும் வெளியேறவும் ஆறும் கால்வாயும் இல்லையானால் என்றாம். தடம் கிடைத்தாலும் - மலைபோன்ற முலைபெற்றாலும்: ஆறுகால் - வண்டு, வண்டுபோன்ற கண்.

Boz செங்கட் கருமுகில் போலப்புல் லாணித் திருப்பதிக்கண் எங்கட் கினியவன் மாயவ னுார விருந்தடந்தேர் வெங்கட் களிறு தருராச ராசன் மிளிர்வரைவாய் உங்கட் குடங்கை யிருக்கையி லேகுட மோவிட்டிரே.

ఇతర ఉఅఅతమ - சிவந்த கண்ணையுடைய மேகம்; திருமாலுக்கு உகி ைப), புல்ல்ாணி - திருப்புல்லாணி, திருமால் திருப்பதிகள் நூற். றெட்டுள் ஒன்று. எங்கட்கு இனியவன்-எங்களுக்கு இனிமை செய்பவன்: எம் கட்கு இனியவன் என்று கொண்டு எம் கண்களுக்கு இனிய காட்சி தருபவன் என்றும் கூறலாம். இருந்தடந்தேர் - பெரிய அகலமான தேர்: வெங்கட்களிறு - சினத்தால் மிக்க கண்களையுடைய யானை, திருப்புல் லானித் திருமால் எழுந்தருளத் தேரும் யானையும் தந்தவன் இராச ராசன். மிளிர்தல் - விளங்குதல்; உம் கட்குடம் கையிருக்கையிலே குடமே விட்டிரே - உமது கள்ளுக்குடம் கையிலிருக்கையிலே வெறுங் குடத்தைத் தந்தீரே என்பது வெளிப்படை. உம் கண் குடங்கை இருக் கையிலே - உம்முடைய கண் உள்ளங்கையில் மறைக்கிருக்கையில்: குடமோ விட்டிர் - குடம்போன்ற முலைகளை வெளிப்படுத்தினர் என்றவாறு. -

3O8.

μισυφυή சலஞ்செயற் குட்பட லில்லாப் புகழ்மையொடு வல்லச் லம்பொர நிற்பவன் றன்பெரு மைக்கியைய இல்லச் லம்மெனச் செய்ராச ராச னிருங்கிரியீர் கல்லச் லங்கொடுத் தீர்கணற் றேனே நயந்தவற்கே.

புல்லர் - கீழோர்; சலம் - வஞ்சனை, புகழ்மை - பெருமை; வல் அசலம் பொர நிற்பவன் - வலிய மலைபோன்று நிலைபெற்று விளங்கு பவன்; இல் அசலம் என-அரண்மனையை மலையென்னும்படி: அசலம் - LD EWD Gl) ; பொர - ஒக்க; நல்ல சலம் - நல்ல தண்ணிர்; நற்றேன் - நல்ல தேன்; கொம்புத்தேன்; நல்ல தேனை நயந்தவனுக்கு நல்ல தண்ணிரைக்