பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 இராசராச சேதுபதி

சீர் - சிறப்பு, செல்வம்: தா மரைத் தேவி - செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகள்; வாணி - கலைமகள்; முன்றிலான் - முற்றத்தை உடையவன்; கார் - மேகம்; கார் தந்த - மேகம்போலக் கொடுத்த. செங்கை - கொடுத்துச் சிவந்த கை; கவிப்புலவோர் - கவிபாடும் புலவர்; ஊர் தந்த - ஊரையே மானியமாக வழங்கிய; நீர் தந்த வந்தனம் நன்றாம் - நீர் தந்த அஞ்சலி நன்றாகும்; கைப் பூவையும் நேர்தரின் கையிலுள்ள புட்பத்தையும் நேரே தந்தால். புட்பாஞ்சலி செய்யு மிடத்துப் புட்பத்தை இடாமல் அஞ்சலியிடுதல் வழக்கில்லை என்பதாம். நீர் தந்த அம் தனம் நன்றாம் - நீர் தந்த அழகிய முலை bsirรกเก யுடையதாகும். கைப்பூவையும் நேர்தரின் கையிலுள்ள பூவாகிய

கண்ணையும் எதிரே தந்தால் என்க.

10

இயம்பட்ட திக்கும் விசய மியற்றி யிசைவென்றிமான் குயம்பட்ட தோளினன் சீராச ராசன் குளிர்வரையீர் கயம்பட்டினிதணியாமையைக் காணுங் கருத்துமிலை கயம்பட்ட கற்கரும் புள்ளது கைக்கொண்டு கல்கலிரே.

இயம்பு அட்ட திக்கும் - பேசப்படுகிற எட்டுத் திசையும்; எட்டுத் திசை - கிழக்கு முதலிய நான்கு பெருந்திசையும் தென்கிழக்கு முதலிய நான்கு கோணத்திசையும் ஆக எட்டு. விசயம் இயற்றி - திக்குவிசயம் செய்து வெற்றிகொண்டு. திக்குவிசயம் - எல்லாத்திசைகளிலும் சென்று பகைவரை அடக்கி வெற்றி பெறுதல். இசை வென்றிமான்-பொருந்தும் வெற்றிமகள்; குயம் - முலை; வென்றிமான் குயம்பட்ட தோளினன். வெற்றி மகளால் தழுவப்பட்டமையால் அவள் முலை பதிந்த தோள் என்றார். தோள் - மார்பு எனினும் ஆம்; கயம் பட்டினி தணியாமை யைக் காணும் கருத்தும் இலை-யானை பசி தணியாமையைப் பார்க்கும் கருத்தும் நுமக்கு இல்லை. நயம்பட்ட நற்கரும்பு உள்ளது கைக் கொண்டு நல்கலிர் - நயமுண்டாகிய நல்ல கரும்பு நும்பால் உள்ளது; அதனை நும் கைக்கொண்டு கொடுத்தீர் இல்லை; இஃது என் அருளி யவாறு என்பதாம். கயம் பட்டு இனிது அணியாமையைக் காணும் கருத்தும் இலை-யானையாகிய முலை பட்டினை இனிதாக அணியாமை யைப் பார்க்கவும் நுமக்குக் கருத்து இல்லை; கண்மூடுதலால் என்றபடி. நயம்பட்ட நற்கரும்இள்ளது கைக்கொண்டு - நல்கலிர். புள்ளது - புள். வண்டு; கரும்புள்ளாகிய அது என்றது வண்டுக்கொப்பாம் கண்ணை; வண்டினைக் கைக்கொண்டு நல்கா தாராயினிர் என்க.