பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு து ைறக் கோவை 13

19

சங்கத் தடங்கடற் சேர்ப்பன் செருவென்றி தந்துயர்ந்த சிங்கத் துவ சத்தன் சீராச ராசன் சிகரியைப்போ லிங்குப் பொலிபவர் கண்ண மயில்பெற வெண்னுமெனக் கங்குக் குடமளித் திட்டா ரிதென்கொ லதிசயமே.

சங்கம் - சங்கு; கடற்சேர்ப்பன் - கடல்சார்ந்த நாட்டுத் தலைவன்; செரு வென்றி - போரில் வெற்றி , சிங்கத்துவசத்தன் - சிங்கக் கொடியை யுடையவன்; சீராசராசன் சிகரியைப்போல் இங்குப் பொலிபவர்சிராசராசன் மலையைப்போல் ஈண்டு விளங்குபவர்; தலைவி. பொலிபவர் கண்ணா மயில்பெற எண்ணும் எனக்கு - விளங்குபவரிடத்துள்ளதாகிய மயிலைப் பெறுவதற்கு நினைக்கும் எனக்கு; அம் குக்குடம் அளித்திட்டார் - அழகிய கோழியைத் தந்திட்டார்:கண் ஆம் அயில் பெற எண்ணும் எனக்கு - கண்ணாகிய வேலைப் பெறுவதற்கு நினைக்கும் எனக்கு; அங்குக் குடம் அளித்திட்டார் - அவ்விடத்துக் குடமாகிய முலையினைத் தந்தார். ஒன்று விரும்ப ஒன்று தரலால் இஃது என்ன வியப்பு என்றபடி,

2O

விம்மத லாதி பதின லுலகும் விரைந்துதொழச் சம்மத மர்கிய சீராம சேது தராபதிபோர் மும்மத மாப்படைச் சீராச ராசன் முகில் வரைவாய் அம்ம தனம்படைத் தாயென் றறைவ னணிமயிலே.

விம்மதலம் - பரந்தபூமி, பூவுலகம் முதலான மேலேழுலகும் கீழே ழுலகுமாகிய பதினான்கு உலகங்கள்; சம்மதமாகிய ஒருப்பட்ட உடன் பட்ட, சீராம சேது - சீரா மனால் கட்டப்பட்ட திருவணை; சேதுதரா பதிசேதுநாட்டு மன்னன், மும்மத மாப்படை மூன்று மதங்களையுடைய யானைப்படை. முகில் - மேகம். அம்ம தனம் படைத்தாய் என்று அறைவன் - ஆச்சரியப்படும்படியாகப் பொருளை உண்டாக்கினா ய், என்று சொல்லுவேன். அம் மதன் அம்பு அடைத்தாய் - அழகிய மதனனுடைய அம்பாகிய குவளைமலர் போன்ற கண்களை மூடினாய் : அம்ம தனம் படைத்தாய் - முலைபடைத்தாய். அணிமயிலே - அழகிய மயில் போன்ற சா யலையுடைய பெண்ணே, .