பக்கம்:இராஜன் சிறுவர்க்குரிய கதைகள்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3. புண்டரீகர் குக்குட முனிவரை ஏன் இழிவாக நினைத்தார்?

4. குக்குட முனிவரின் ஆச்சிரமத்துக்கு வந்த மூன்று பெண்டிர் யாவர்?

5. வினவிய புண்டரீகர்க்குக் கோபங்கொண்ட பெண் கூறியது என்ன?

6. பாதங்களை வணங்கி வேண்டிக் கொண்ட புண்டரீகர்க்கு அப்பெண் கூறிய மொழி யாது?

7. குக்குட முனிவரைப் பற்றித் தெய்வப் பெண் கூறியது என்ன?

8. புண்டரீகர் கதையால் நீ அறிந்து கொண்ட நீதி யாது?

2. புண்டரீகர்-II

புண்டரீகர், ‘அந்தோ! யான் என் தாய், தந்தையரை அடித்து, வசை மொழிகளைப் பகர்ந்தேனே! அவர்கள் மனம் நோகும்படி நடந்தேனே! ஐயோ! வயது முதிர்ந்த அவர்கள் நடந்து வர, பாவியாகிய யான் குதிரை மேல் ஏறி வந்தேனே! என்னைப் போன்ற பாவியுளனோ! புண்ணிய தலங்களைப் பூசிப்பது மேலானது என்று எண்ணியல்லவோ காசிக்கு வந்தேன்! என்னே என் அறிவீனம்!’ என்று பெரிதும் வருந்தினார்.

அவர் படுந்துன்பத்தைக் கண்ட அத்தெய்வ மங்கை, ‘அப்பா, உன் தாய் தந்தையரிடம் நீ இக்கணமே சென்று, அவர்கள் மல-

9