பக்கம்:இராஜன் சிறுவர்க்குரிய கதைகள்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தனர். புண்டரீகர் தம் பெற்றோர்களின் மனக் குறிப்பை அறிந்து, ஏற்ற பணிவிடைகளைச் செய்து வந்தார். அவரை அந்நகரத்தார் எல்லாரும் புகழ்ந்தனர்.

ஒரு நாள், அவர் தம் பெற்றோர்க்கு, வேலை செய்து கொண்டிருக்கையில், புண்டரீகர் என்னும் பெயருடைய கடவுள் அங்குத் தோன்றினர். பகவான் வந்திருத்தலை அறிந்தும், புண்டரீகர் அவருக்கு உபசாரம் செய்யாமல், ஒரு செங்கல்லை விட்டெறிந்து, ‘சுவாமி, அதன் மேல் நின்று கொண்டிரும்; சீக்கிரம் வருகின்றேன்,’ என்று கூறி விட்டுத் தம் பெற்றோர்க்கு வேண்டிய வேலையைச் செய்தார். பெருமான், அவரது செயலுக்கு வியந்து, அன்பு கொண்டு அவரை ஆசீர்வதித்துச் சென்றார்.

கேள்விகள்:

1. தெய்வப் பெண் முனிவரைப் பற்றிக் கூறியதும், புண்டரீகர் அடைந்த வருத்தம் என்ன?

2. புண்டரீகர் படும் துன்பத்தைக் கண்டு, தெய்வ மங்கை கூறியது என்ன?

3. குக்குட முனிவரை வணங்கிய பின், புண்டரீகர் என்ன செய்தார்?

4. தம்மை வணங்கிய மகனுக்குப் பெற்றோர் கூறிய ஆசி மொழி என்ன?

5. பெற்றோர்க்கு வேலை செய்து கொண்டிருக்கையில், வந்த கடவுளை எப்படி உபசரித்தார்?

11