பக்கம்:இராஜன் சிறுவர்க்குரிய கதைகள்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6. பெற்றோர்க்குப் பணிவிடை செய்து வந்த புண்டரீகர் பெற்ற பலன் யாது?

3. நாய் காட்டிய வீரச் செயல்

ஒரு சண்டைக் கப்பல், பல பிரயாணிகளை ஏற்றிக் கொண்டு, ஒரு துறைமுகத்தை விட்டுப் புறப்பட்டது. அதில், பணக்காரர் ஒருவரும், ஒரு வியாபாரியின் மனைவியும், அவள் குழந்தையும், அக்குழந்தையின் செவிலித் தாயும் ஏறினர். வர்த்தகன் மனைவி, தன் தாய் வீட்டிற்குப் போகப் பிரயாணமானாள். அவள் தன் குழந்தை மேல் அதிக அன்புடையவள். அவளுக்கு இருந்தது ஒரே குழந்தை. அதனால், அவள் அதைத் தன் உயிரினும் மேலாகக் காப்பாற்றி வந்தாள்.

ஒரு நாள், அக்கப்பல் ஒரு நகரத்தின் துறைமுகத்தை அடைந்தது. அந்நகரத்தின் வினோதங்களைப் பார்ப்பதற்குச் செவிலித் தாய், குழந்தையை எடுத்துக் கொண்டு கப்பலை விட்டு இறங்கினாள். அப்போது அவள் கையிலிருந்த குழந்தை தவறி, நீரில் விழுந்து, மறைந்து விட்டது.

குழந்தை விழுந்ததால், கப்பலில் குழப்பம் உண்டாயிற்று. உடனே நீரில் குதித்துக் குழந்தையை எடுப்பவர் ஒருவரும் இல்லை. அக்குழப்பத்தைக் கண்ணுற்ற பிரபு அங்கு வந்-

12