பக்கம்:இராஜன் சிறுவர்க்குரிய கதைகள்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறிது நேரத்திற்குள் படகுகள் கரையை அடைந்தன. குழந்தை உயிருடன் இருந்தது. அதனைக் கண்ட வர்த்தகன் மனைவி ஆனந்தம் அடைந்தாள்; தன் உயிரினும் இனிய குழந்தையைக் காப்பாற்றிய நாயைத் தன் இரு கரங்களாலும் அன்புடன் எடுத்து, அணைத்துக் கொண்டாள்; அந்த நாய்க்குத் தான் என்ன உபகாரம் செய்வது என்பதை அறியாமல் தயங்கினாள்.

பின்பு, அவள் அந்நாய்க்கு உரிய பிரபுவை அடைந்து, ‘கனவானே, ஆபத்தில் உதவி புரியும் அருங்குணச் செல்வரே, என் குழந்தையைக் காப்பாற்றிய இந்நாய் என்னிடமே இருக்க விடுவீரா? என் சொத்தில் பாதியை இந்நாய்க்குப் பதிலாக உமக்குத் தருகின்றேன்,’ என்று பணிவுடன் கேட்டனள்.

கனவான், அம்மங்கை தம் நாயின் மேல் 'கொண்ட ஆசைக்காகச் சந்தோஷம் அடைந்தாரென்றாலும், தம் நாயைக் கொடுக்க விரும்பவில்லை. அவர், ‘அம்மா, எனக்கு இந்த உலகத்தையே கொடுத்தாலும், இந்த நாயைக் கொடேன்; உமக்கு உமது குழந்தை எவ்வளவு சிறந்ததோ, அவ்வளவு இந்த நாய் எனக்குச் சிறந்தது’ என்றார்.

நாயும் அவர்கள் பேசியதை அறிந்து கொண்டது. ‘எங்கள் இருவரையும் பிரிக்க

15