முடியவே முடியாது!’ என்று குறிப்பால் உணர்த்துவது போல அது குரைத்தது.
வர்த்தகன் மனைவி நாயின் அன்பையும், கனவான் அன்பையும் பெரிதும் பாராட்டினள். பின்பு அவள் கனவானுக்கு வந்தனம் அளித்து, மகிழ்ச்சியுடன் சென்றாள்.
கேள்விகள்:
1. ஒரு நாள் துறைமுகத்தில் வந்து தங்கிய கப்பலில் உண்டான குழப்பம் என்ன?
2. நீரில் விழுந்து விட்ட குழந்தையை எடுக்கக் கப்பலில் உள்ளவர் என்ன செய்தனர்?
3. நீரில் விழுந்து மறைந்த குழந்தை எப்படிக் காப்பாற்றப்பட்டது?
4. குழந்தையைக் கொண்டு வரச் சென்ற நாய், எவ்வாறு கரையை அடைந்தது?
5. தன் குழந்தை நாயால் காப்பாற்றப்பட்டதை அறிந்த வர்த்தகன் மனைவி என்ன செய்தாள்?
6. நாயைக் கொடுக்கும்படி கேட்ட குழந்தையின் தாய்க்குக் கனவான் கூறியது என்ன?
7. நாய் செய்த செயல் என்ன?
4. ஓர் அரிய செயல்
வியாபாரி ஒருவன் அளவிறந்த பொருள் சம்பாதித்தான். அவனுக்கு மூன்று குமாரர் இருந்தனர். அம்மூவரையும் கல்வியிலும், வாணிபத்திலும் வல்லவர்களாகச் செய்வித்தான் தந்தை. அவன், தான் இறக்கும் காலம்
16