பக்கம்:இராஜன் சிறுவர்க்குரிய கதைகள்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5. நம்பிக்கைத் துரோகம்

இங்கிலாந்து தேசத்தில் ஜேம்ஸ் என்ற வர்த்தகன் ஒருவன் இருந்தான். அவன் மிகவும் நல்லவன்; ஒருவரையும் மனம் நோகும்படி பேச மாட்டான்; நம்பினவரை மோசம் செய்ய மாட்டான். அவனுக்குப் ‘பட்லர்’ என்ற ஒரு நண்பன் இருந்தான். அவன் மிகவும் கெட்டவன்; ஆனாலும், தன்னை நல்லவன் என்று உலகத்தார் மதிக்கும்படி நடந்து வந்தான்.

ஒரு நாள், ஏதோ அவசர காரியமாக ஜேம்ஸ் வெளி நாட்டுக்குச் செல்ல வேண்டி நேர்ந்தது. அவன், ஒரு வேங்கை மரத்தடியில், பட்லரைச் சந்தித்து, தன் பொருள்களையெல்லாம் அவனிடம் கொடுத்து, தான் திரும்பி வரும் வரையில், அவற்றைக் காப்பாற்றும்படி அவனை வேண்டினன். பட்லரும் அதற்கு ஒப்புக் கொண்டான்.

ஆறு மாதங்கள் கழிந்த பின்னர், வர்த்தகன் இங்கிலாந்தை அடைந்து, தன் நண்பனைக் கண்டான்; தன் பொருள்களைத் தருமாறு அவனை வேண்டினான். பட்லர் அவனைப் பார்த்து, ‘என்ன! உன் பொருள்களா! உனக்கென்ன பைத்தியமா? நான் உன்னை இது

22