பக்கம்:இராஜன் சிறுவர்க்குரிய கதைகள்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4. இளங்குமணன் மன்னன் ஆனதும் செய்தது யாது ?

5. காட்டை அடைந்த கவிவாணர்க்குக் குமண வள்ளல் கூறியது என்ன?

6. காட்டை அடைந்த குமண வள்ளல் மீண்டும் எப்படி மன்னர் ஆனார்?

8. அடக்கமுள்ள அரசன்

அடக்கத்தை ஆபரணமாக பூண்டவர்களே மேலானவர்கள். அவர்கள் உலகத்தில் நல்லாரால் போற்றப்படுவார்கள். முன் ஒரு காலத்தில் ‘இராபர்ட்டு’ என்பவர் ஒருவர் இருந்தார். அவர் நார்மன் வர்க்கத்தைச் சேர்ந்தவர். அவர் அடக்கம், பொறுமை, உண்மை, வீரம் முதலிய நற்குணங்கள் வாய்ந்தவர். அவர் நற்குணங்களை உலகத்தில் இருந்த அரசர் யாவரும் அறிந்தனர். அவர் ஏழைகளிடத்தும், பிரபுக்களிடத்தும் வித்தியாசம் பாராட்டுவதில்லை. அவர் எப்பொழுதும் எளிய உடையே உடுத்துக் கொண்டிருப்பார். அவர் அரசர் என்பது பலருக்குத் தெரியாது. அவர் பல சந்தர்ப்பங்களில் தம் நற்குணங்களைச் செய்கைகளின் வாயிலாக உலகத்திற்கு அறிவித்துள்ளார், அவரது பெருமையைக் கிரேக்க நாட்டரசன் கேள்வியுற்றான். ஜனங்கள் அவரைப்பற்றிச் சொல்வன எல்லாம்

36