பக்கம்:இராஜன் சிறுவர்க்குரிய கதைகள்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆதலால், இவன் நம் விருந்தாளியாகின்றான்,’ என்றது.

பெண் புறா கூறியவற்றைக் கேட்டதும், ஆண் புறா, தன் பெட்டையின் அறிவிற்குப் பெரிதும் வியந்தது. அஃது உடனே பறந்து சென்று, காய்ந்த சுள்ளிகளைப் பொறுக்கி வந்தது; வேடனுக்கு எதிரில் அவற்றைக் குவியலாகப் போட்டது. பின்பு எங்கேயோ சென்று, எரிகொள்ளி ஒன்றைக் கொண்டு வந்து குவியலில் இட்டு, தன் சிறகுகளால் விசிறித் தீ மூட்டியது. நெருப்பு நன்றாய்ப் பற்றி எரியவே, வேடன் மூர்ச்சை தெளிந்து எழுந்தான.

வேடன் சந்தோஷம் அடைந்தான். அவன் புறாவை நோக்கி, ‘ஓ பட்சியே, என் குளிரைப் போக்கினாய். உன்னை என்றும் மறவேன்! இப்பொழுது எனக்குப் பசி அதிகமாய் இருக்கிறது. என்ன செய்வேன்! எனக்கு ஏதேனும் உணவு கொடுத்துக் காப்பாற்று,’ என்றான்.

ஆண் புறா அவனைப் பார்த்து, ‘ஐயா, இந்த அகாலத்தில் யான் எங்குச் சென்று இரை தேடி வருவேன்? என் இறைச்சியைத் தின்றாவது, உன் பசியைப் போக்கிக் கொள்,’ என்று கூறி, நெருப்பில் விழுந்து மாண்டது.

தன் பதி செய்த செயலைக் கண்ட பெண் புறா, பெருங்களிப்படைந்தது. வேடன் ஆண் புறாவின் இறைச்சியைத் தின்று பசியாறினானென்றாலும், ஆண் புறாவின் அரிய செய்கை

41