பேன்,’ என்று தன்னுள் தீர்மானித்துச் சென்றான். அவன் தீர்மானித்தபடியே நல்லொழுக்கத்துடன் வாழ்ந்து, உயர்ந்த பதவியை அடைந்தான்.
கேள்விகள்:
1. பெண் புறா எப்படி வேடனுடைய கூட்டில் அகப்பட்டது?
2. வேடனுக்கு ஆலமரத்தண்டை நேர்ந்த விபத்து என்ன?
3. வேடன் எப்படி மூர்ச்சை தெளிந்து எழுந்து, உணவு உண்டான்?
4. தான் பிடித்திருந்த பெண் புறாவை வேடன் ஏன் கூட்டிலிருந்து எடுத்து வெளியில் விடுத்தான்?
5. விடப்பட்ட பெண் புறாவின் நிலை என்ன ஆயிற்று?
6. வேடனை உபசரித்த புறாக்கள் இரண்டும் பெற்ற பலன் என்ன ?
7. புறாக்கள் விமானத்தில் சென்ற வினோதத்தைக் கண்ட வேடன் செய்தது என்ன?
10. திருமலை நாயகர்
தென்னாடு, தமிழ் நாடு எனவும் பெயர் பெறும். அதனைப் பாண்டி நாடு, சோழ நாடு, சேர நாடு என்று மூன்று பிரிவுகளாகச் செய்து, பாண்டியர்களும், சோழர்களும், சேரர்களும் ஆண்டு வந்தார்கள். சோழர்களுக்கும், பாண்டியர்களுக்கும் பின்பு, அவர்கள் நாட்டை நாயகர் என்ற ஒரு வமிசத்தார் ஆண்டனர்.
43