காட்டிக் கொடுத்தேன். நீ இழந்த தொகையை விட, முந்நூறு வராகன் அதிகமாக அனுப்பியிருக்கிறேன். இதைப் பெற்று இன்புறுவாயாக. என்னை மன்னிக்க.”
அக்கடிதத்தை வாசித்தாள் அம்மங்கை. அவள் அடைந்த சந்தோஷத்திற்கு அளவேயில்லை. அவள் கடவுளின் அருளை நினைத்துப் புகழ்ந்தாள். அவள் அப்பெரியவரது அரிய குணத்தை எண்ணி மகிழ்ந்தாள்.
கேள்விகள்:
1. தபால் வண்டியில் சென்று கொண்டிருந்த பிரயாணிகள் பேசிக் கொண்டதென்ன?
2. தபால் வண்டியை நிறுத்திய கள்வர்கள் கூறிய கண்டிப்பான வார்த்தை என்ன?
3. தபால் வண்டியில் சென்று கொண்டிருந்த பெரியவர் கள்வரிடமிருந்து எவ்வாறு தப்பினார்?
4. பணத்தை இழந்த பெண்மணிக்குப் பெரியவர் என்ன கடிதம் எழுதினார்?
5. பெரியவர் சொல்லாமல் செய்த காரியம் என்ன?
12. கடமையே சிறந்தது.
‘ஏழாம் ஹென்றி’ என்னும் அரசர் ஒரு நாள் வேட்டையாடச் சென்றார். சென்றவர்,
நெடுநேரம் வேட்டையாடினார். அவர் மிகுந்த களைப்புற்று, ஒரு மரத்தடியில் தங்கி இளைப்பாறினார். அவருக்குத் தாகம் அதிகரித்தது. அருகில் ஒரு சிறுவன் ஆடுகளை மேய்த்துக்
51