பக்கம்:இராஜன் சிறுவர்க்குரிய கதைகள்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசர் அவன் கூறியவற்றைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தார். சிறுவன் அவ்வளவு புத்தியுடையவனாய் இருப்பான் என்று அவர் எண்ணவேயில்லை. அவர் பின்னும் அவனைச் சோதிக்க எண்ணி, “அப்பா, நான் இவ்வூர் அரசன். எனக்குத் தாகமோ அதிகமாய் இருக்கிறது. நீ சென்று, தண்ணீர் கொண்டு வர மாட்டேன் என்கிறாயே!” என்றார்.

அது கேட்ட சிறுவன், “ஐயா, நீங்கள் அரசராயின், மிகவும் சந்தோஷம்! உங்களுக்கு நமஸ்காரம் செய்கிறேன். யாராயிருந்தாலும் ஆபத்தில் உதவ வேண்டுவதுதான் கடமை. குதிரை மேல் வீற்றிருக்கும் நீங்கள் இந்நேரம் போய் வந்திருக்கலாம். உங்கள் நீர் வேட்கையும் சாந்தியாயிருக்கும். உங்களை யான் அவமதிப்பதாக நீங்கள் எண்ணலாகாது. யான் என்ன செய்வேன்! என் கடமையே எனக்குச் சிறந்தது. என் ஆடுகளை விட்டு யான் செல்லேன். நீங்கள் நீர் வேட்கையால் வருந்துகிறீர்கள். உங்களுக்காக யான் செல்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் இங்கு இருக்கும் போது, இன்னொருவர் யாரேனும் வந்து, தமக்கு நீர் வேட்கை அதிகமாயிருக்கிறதென்றும், நீங்கள் நீர் கொண்டு வரும் வரையில், அவர் இங்கு இருப்பதாகவும் சொன்னால், நீங்கள் என்னைப் போல, நீரைத் தேடிப் போக வேண்டும். அத்தருணத்தில் இரண்டோர் ஆடுகள் நிச்சயமாகக் களவு போய் விடும். நான், என்னை நம்பிய எசமானருக்கு நம்பிக்கைத்

5

53