4. தம்மை உபசரித்த கிழவனையும், கிழவியையும் கடவுள் எவ்வாறு பாராட்டினார்?
5. அன்னதானம் செய்த கிழவனும், மனைவியும் பெற்ற நன்மை என்ன?
14. மங்கையர்க்கரசியார்
பெண்கள் ஆண்களைப் போலவே, நல்ல நூல்களைக் கற்க வேண்டும்; நல்லொழுக்கமும், தெய்வ பத்தியும் உள்ளவர்களாய் இருக்க வேண்டும். கணவர் சொல்லை மீறாது நடக்கும் உத்தமியாய் ஒவ்வொரு மனைவியும் இருத்தல் அவசியம். கணவனே தெய்வம் என்று நினைத்துப் பூசிக்க வேண்டும்.
ஒரு காலத்தில் மணிமுடிச் சோழர் என்னும் ஓர் அரசர் இருந்தார். அவர் மிகுந்த நல்ல ஒழுக்கங்களை உடையவர். அவருக்குக் கடவுள் அருளால் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு ‘மங்கையர்க்கரசி’ என்று பெயரிட்டனர். அவ்வம்மையார் வயது ஆக ஆக, நல்லொழுக்கத்துடன் விளங்கினர். அவர் சிவபெருமானிடத்தில் நீங்காத அன்புடையவர்; தயை, சாந்தம், பணிவு முதலிய நற்குணங்கள் ஒருங்கே அமையப் பெற்றவர்.
அவர் மணத்திற்குரிய பருவம் அடைந்தார். அரசர் அவருக்குத் தகுந்த மணாளனைத் தேட முயன்றார். அவ்வாறு இருக்கையில், மதுரையை ஆண்டு வந்த கூன் பாண்டியர் என்பவர், சோழ நாட்டின் மீது படை எடுத்து வந்து, சோழரைத் தோற்கடித்தார். பின்பு,
58