இராஜன்
சிறுவர்க்குரிய கதைகள்
1. புண்டரீகர்-1
‘லோக தண்டம்’ என்னும் பட்டினத்தில் ஓர் அந்தணர் இருந்தார். அவர் மனைவி மிகவும் நல்லவள். அவ்விருவருக்கும் நெடுங்காலம் வரையில் பிள்ளை பிறக்கவில்லை. பிறகு ஓர் ஆண் மகவு பிறந்தது. அவர்கள் அதற்குப் ‘புண்டரீகன்’ என்னும் பெயர் இட்டார்கள்.
புண்டரீகர் சகல கலைகளும் கற்றுத் தேறினார். வாலிபரானதும், அவர் ஓர் அழகிய பெண்ணைக் கலியாணம் செய்து கொண்டார். அவர் சிறிது காலம் நற்குணம் உடையவராகவே இருந்தார்; பின்னர், தீயவர்களோடு கூடிக் கள் குடித்தல், சூதாடுதல் முதலிய கெட்ட பழக்கங்களில் ஈடுபட்டார். அவருடைய அடாத செயல்களைக் கண்ட தாய் தந்தையர், அவருக்குப் பல விதத்திலும் புத்தி புகட்டினர். எனினும், புண்டரீகர் அவர்கள் சொல்லைக் கேட்கவில்லை. அதனுடன் நில்லாது, அவர் அவர்களை வைவதும், அடிப்பதுமாயிருந்தார். சில நாட்கள் கழிந்த பின்னர், அவர் தம் பெற்றோ-
2
5