தோற்றனர். உடனே அரசர் சைவத்தைத் தழுவினார்.
ஏற்கெனவே, சைவப் பெண்மணியாயிருந்த அரசியாருக்கு, அரசரும் தம் மதத்கைத் தழுவியது பேரானந்தத்தை விளைத்தது.
கேள்விகள்:
1. மங்கையர்க்கரசியார் பாடத்தில் பொதுவாகப் பெண்கள் எப்படி வாழ வேண்டும்?
2. மங்கையர்க்கரசியார் எத்தகைய சிறந்த குணமுடையவர்?
3. மங்கையர்க்கரசியார் திருமணம் எவ்வாறு நடந்தது?
4. கூன்பாண்டியன் சைவ சமயத்தைத் தழுவியது எவ்விதம்?
5. ஞானசம்பந்தர் சமணர்களை எவ்வாறு வென்றார்?
6. ஞானசம்பந்தரைப் பற்றிச் சமணர்கள் அரசரிடம் கூறியதென்ன?
7. ஞானசம்பந்தர் மதுரைக்கு வந்த வரலாற்றை எழுது.
8. கூன்பாண்டியனது வெப்பு நோய் எவ்வாறு நீங்கியது?
15. கொள்வதை விடக் கொடுப்பதே நன்று.
ஓர் ஊரில் பணக்காரன் ஒருவன் இருந்தான். அவனுக்கு ஒரு மகன் இருந்தான். அவன் பெயர் கோவிந்தன் என்பது. அவனுடன் எந்நேரமும் இருந்து, அவனுக்குக் கல்வி கற்பிக்கத் தக்க ஓர் ஆசிரியர் வேண்டுமென்று கனவான் விரும்பினான். அதற்கு ஏற்றவாறு, ஓர் உபாத்தியாயர் கிடைத்தார். அவர் மிகவும் நற்குணம் வாய்ந்தவர்.
62