பக்கம்:இராஜேந்திரன்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#4 இராஜேந்திரன்

படமாட்டாது. ஆகையால் நானே போலீஸ் கமிஷனரவர்களி டம் நேரில் சென்று திருட்டுப்போன விஷயத்தை எழுதி வைத்து இவ்விஷயத்தைப் பகிரங்கப் படுத்த வேண்டா மென்றும் ரகசியமாகவே துப்புத் துலக்க வேண்டுமென்றும் சொல்லி ஏற்பாடு செய்கிறேன். நீ மாத்திரம் சங்ககாத் விஷயத்தில் துவேஷம் காட்டாமல் வேலைகளே நடத்திக் கொண்டு வா. நமது சொத்துக் கட்டாயமாய் அகப்படு மென்று எனக்கு எக்காரணத்தாலோ தோற்றுகிறது.அரங் கன் சொத்து அக்கரை யேருது’.

ராகவன். தாங்கள் சொல்லும் விஷயங்கள் ஒன்றும் எனக்குப் பிடிக்கவில்லை. நான் பூட்டுப் போடுவதற்குள் கோட்டுகளே எங்கோ ஒளித்து வைத்துவிட்டுப் பூட்டுப் போட்டிருப்பான். நான் போய் வழக்கம்போல் பூட்டுப் போட்டு வந்தேன்; இரும்புப் பெட்டியை நான் திறக்க வேண்டுமானுல் கூட அவனுடைய சாவி தேவையல்லவா? ஆகையால் அவனேதான் எடுத்திருப்பானென்று பூரண மாய் நான் நினைக்கிறேன்.

ராஜேந்திரன்: நண்பரவர்களே! அவன் உண்மையான குற்றவாளியாக இருந்தாலும் நமது சொத்தை நாம் பெற விரும்பினுல் அவனே வெளியில் விட்டு வைத்துத் துப்பறி வோர்களே அவனுக்குத் தெரியாமல் பின் தொடரச் செய்து அவன் காரியாதிகளேக் கவனித்தால்தான் நல்லது. நான் கமிஷனர் துரையவர்களிடம் நேரில் போய்ப் பேசி அப்படியே ஏற்பாடு செய்கிறேன்.

இப்படிச் சொல்லித் தமது நண்பரைச் சமாதானப் படுத்திவிட்டுக் கமிஷனர் துரையவர்களிடம் போய்ப் பேசி அப்படியே ஏற்பாடு செய்துவிட்டார். கமிஷனர் துரை யவர்களோ போலீஸ் வழக்கப்பிரகாரம் ரங்கநாத்ை த மட்டும் கவனிப்பதாய் ராஜேந்திரனிடம் சொன்னபோதிலும், ராஜே க்திரன், ராகவன், ரங்கநாத் ஆகிய மூவரையும் ஜாக்கிரதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/103&oldid=660483" இலிருந்து மீள்விக்கப்பட்டது