பக்கம்:இராஜேந்திரன்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவிந்தனின் ஆராய்ச்சி } {}

நான் கேட்கும் கேள்விகளால் தாங்கள் கோபப்படாமலும், இது அவசியம் அது அநாவசியம் என்று கினேக்காமலும், எவ்வளவு அந்தரங்கமான விஷயமாக இருந்தாலும் ஒளிக் காமலும் உண்மையான மறுமொழிகள் சொல்வதாயிருக் தால் மட்டும் நான் இதில் தலையிடக்கூடும். முன் தங்கள் பத்தினியாகிய ருக்மிணியைத் தேடச் சொன்னபோது தாங் கள் என் கேள்விகளுக்குச் சரியான பதில் அளிக்காததால் தான் என்னுல் முடியாதென்று விட்டுவிட்டதைத் தாங்கள் நன்கு உணர்வீர்கள். ஆகையால் இந்த விஷயத்திலும் முன் போல் தாங்கள் ஒளிப்பு மறைப்பாகப் பேசுவதானுல் தங்கள் காரியம் கைகூடாமற் போவதோடு என்னுல் கண்டுபிடிக்க முடியாமற் போயிற்றென்ற அவமானமும் எனக்கு வரும். ஆகையால் தாங்கள் தீர்க்காலோசனை செய்து எப்படி நடந்துகொள்ள உத்தேசித்திருக்கிறீர்களென்று சொல்லி விடுங்கள். முன்பின் யோசித்துத் தங்கள் வேலையையும் என் நேரத்தையும் விணுக்காமல் சொல்லுங்கள், உத்தாவு கொடுத்தால் இப்போதே போய்விடுகிறேன்.

ராஜேந்திரன்: கோவிந்தா! முன்னுல் நான் சங்கோஜப் பட்டுக்கொண்டு தங்களிடம் உண்மையைக் கூருதது வாஸ் தவமே. அப்படி இவ்விஷயத்தில் நான் கூச்சப்படவாவது பயப்படவாவது ஒளிக்கவாவது எவ்விதப் பிரமேயமுமில்லே. நீங்கள் எந்தவிதமான கேள்விகள் கேட்டாலும் நான் உண் மையான பதில் அளிக்கிறேன், கோபப்படுவதும் இல்லே யென்று உறுதியாய்க் கூறுகிறேன். இவ்விஷயத்தில் நான் மாத்திரம் உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டுமென்று இருக்க வில்லை; ரங்கநாத்துக்கு ஜாமீன் கொடுத்திருக்கும் பினுங்கிலிருக்கும் இந்து பினங்கு பர்ங்கி மானேஜரும் தங் களே வைத்துத் துப்புத் துலக்கும்படிக்கும் அந்த செலவு களேப் பொறுப்பதாயும் அடித்திருக்கும் இந்தத் தந்தியை யும் அதற்குக் கொடுத்த பதிலையும் பாருங்கள்.எப்படியாவது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/110&oldid=660490" இலிருந்து மீள்விக்கப்பட்டது