பக்கம்:இராஜேந்திரன்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

靈醫 இராஜேந்திரன்

இல்லாமலிருக்தால் இன்னும் எவ்வளவு கேவலமாய், பேசியிருப்பானே தெரியாது. உடனே என் சொந்த உண்டியல் எழுதி, ரங்கநாத்ைத'என் வண்டியிலேயே போய் மாற்றிக் கொடுத்துவிட்டு வரச் சொன்னேன்.

கோவிந்தன் சரி, தங்கள் ஆப்த நண்பராகிய ம-ா-ாழி ராகவனே இங்கே வரவழைத்து என்னேக் காட்டி இவர்தா, துப்பறியும் கோவிந்தனென்றும் அத்திருட்டைத் துப்புத் துலக்க வங் திருக்கிருரென்றும் திடீரென்று தெரிவியுங் கள், உடனே ராஜேந்திரன் மணியடித்ததும் சேவகன் வந்தான். சேவகனிடம் சொல்லி ராகவனே அழைத்துவர, சொல்லி, அவர் வந்ததும் கோவிந்தன் சொன்னவாறு ராஜேந்திரன் சொன்னர். உடனே ராகவன் கோவிந்தனின் இரு காங்களேயும் பிடித்துக்கொண்டு, அவரைத் தமக்கு நேரில் தெரியாவிட்டாலும் அவர் பிரதாபங்களே மட்டும் தாம் கேள்விப்பட்டிருப்பதாகவும் ஆகையால் தங்கள் பாங்கியிலிருந்து திருட்டுப்போன வைரங்களேயும் ரூபாய் களேயும் கண்டுபிடிப்பது அவருக்கு மிகவும் சுலபமென்றும், முக்கியமாகத் திருடன் இன்னுனென்று தெரிந்தபின் சொத்தைக் கண்டுபிடிப்பது அவருக்கு மிகவும் சுலப மென்றும் தெரிவித்தார்.

கோவிந்தன்: ஆல்ை தங்களுக்குத் திருடினவன் இன்னு னென்று தெரிந்துவிட்டதா?

ராகவன். தங்களுக்கு எனது நண்பர் இன்னும் சமா காரங்களே முற்றும் தெரிவிக்கவில்லேபோல் இருக்கிறது.

கோவிந்தன்: அவருக்குத் தெரிந்தவரையில் சமாசாரங் களேத் தெரிவித்துவிட்டதாகத் திட்டமாய்ச் சொன்னர்.

ராகவன்: பின் தங்களுக்குச் சந்தேகமென்ன? ஒரு கால் ரங்கநாத் பேரில் ராஜேந்திரனுக்கு இருக்கும் கம்பிக்கையைத் தங்கள் மனத்தில் பதித்து வேரூன்றும்படி செய்துவிட்டார் போல் இருக்கிறது. அவருக்கு வெளுத்தெல்லாம் பால்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/115&oldid=660495" இலிருந்து மீள்விக்கப்பட்டது