பக்கம்:இராஜேந்திரன்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ižū இராஜேந்திரன்

ஏற்பட்ட சந்தேகங்கள் என்ன என்ன? தாங்கள் அவர்பால் கண்டுபிடித்த தவறுதல்களேத் தெரிவியுங்கள்.

ராகவன் இ.ல்...லே; அப்படி ஒன்றுமில்லை. ஆனுல் அவைகளிெைலல்லாம் அவர் திருடினரென்று சொல்ல முடியாது.

கோவிந்தன்; எவைகளால் தயவுசெய்து தங்களுக் குத் தெரிந்தவற்றைச் சொல்லுங்கள்.

ராகவன்: சென்ற மூன்று மாத காலம் வரையில் பாழுது போனுல் எங்கள் வீட்டை விட்டு வெளியே போகாமல் இருந்து வந்தார். அதற்குப் பின் அவர் விட்டிற்கு இரவு 10, 13, 1, 3 மணிக்குக்கூடத் திரும்பி வரு கிருர், எங்கள் விட்டில் ஜாகை வைத்திருந்தவர் கினேத்த நேரங்களில் வருவதால் எங்களுக்கு அசெளகரியம் உண்டாகுமென்று கினேத்து வேருக ஜாகையும் சாப்பாடும் வைத்துக்கொண்டார். இப்போது எங்கள் வீட்டிற்கு வரு வதே இல்லே. ஆகையால் ஏதாவது துஷ்ட சாவகாசம் ஏற் பட்டிருக்குமென்று கினேத்து ஜாடையாய்க் கண்டிக்கப் பார்த்தேன். அவர் மரியாதையாய், தங்கள் வேலே நேரங் களிலாவது வேலையிலாவது தவறுதல் ஏற்பட்டால் மட்டும் என்ன விசாரித்துத் தக்க தண்டனே விதியுங்கள்” என்று சொன்னர். இனிப் பேசுவது மரியாதைக் குறைவென்று அத்துடன் கிறுத்திவிட்டேன்.

கோவிந்தன்; எங்கே செல்கிருர் என்ன செய்கிருர் என்று விசாரித்திர்களா? -

ராகவன்: யாரோ தண்டையார்ப் பேட்டையிலிருக்கும் லீலாவதி என்று சொல்லும் ஒருத்தி விட்டிற்குப் போவ தாயும் அங்கே சதுரங்கமாடுவதாயும் மட்டும் தெரிகின்றது. என்ன என்ன செய்வாரோ யார் பார்த்தார்கள்? அப்பால் நான் விசாரிப்பதில்லை. -

உடனே தாம் ராகவனக் கேட்க வேண்டிய கேள்வி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/119&oldid=660499" இலிருந்து மீள்விக்கப்பட்டது