பக்கம்:இராஜேந்திரன்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 இராஜேந்திரன்

ராஜேந்திரன் பிறப்பதற்கு அநேக வருஷங்களுக்கு முன்கு லிருந்தே அவர்கள் வீட்டிலேயே சாப்பிட்டுக்கொண்டு, அவர்கள் கொடுக்கும் வஸ்திரங்களே உடுத்துக்கொண்டு; அவர்கள் ஆளாகவே இருக்கிறேன். நான் சம்பளமென்று வாங்கினதேயில்லை. எங்கள் வீட்டிற்குத் தேவையான நெல்லோ புல்லோ என் பெண்சாதி வாங்கிப் போவாள், கல்யாணம், காட்சி, சாவு, வாழ்வு, முதலியவைகளுக்கெல் லாம் அவர்களே பணமோ சாமான்களோ கொடுத்து வரு கிருர்கள். என் ஆயுசு வரையில் இப்படித் தள்ளிவிட்டுப் போனல் அதுவே போதும். நான் சுருட்டுப் பிடிப்பது மில்லை, பொடி போடுவதுமில்லை; கள்ளு, சாராயம் முதலிய வைகளேக் குடிப்பதுமில்லை. ஆகையால் தயவு செய்து மன்னியுங்கள்.

கோவிந்தன்: ஆல்ை சரி; உன் எஜமானர் மெத்த நல்லவர்போல் இருக்கிறது. தாயைப்போல் பிள்ளே, நூலைப்போல் சேலே என்பதைப்போல் அவர் மகனும் அப் படியேதான் இருப்பார். ஆகையால் உனக்கும் உன் சந்ததி யாருக்கும் எந்தவிதமான குறைவும் இருக்காது.

ராமன்: எனது எஜமான் இருக்கும்போதே கான் செத் துப்போக வேண்டுமென்று சுவாமியைப் பிரார்த்திக்கிறேன். கோவிந்தன் ஏன் அப்படி அவருக்குப் பின்னல் அவர் குமாரனை பூரீனிவாசன் அவரைப் பார்க்கிலும் உமது பேரில் அதிகப் பிரியமாக இருப்பாரல்லவா?

ராமன்: ஐயா! அந்த வயிற்றெரிச்சலேக் கேளாேதயுங் கள். நான் புண்ணியம் செய்திருந்தால் எனது எஜமானர் கண் முன்பே ஹாய்யாக நான் போய்விட்வேண்டும்.

கோவிந்தன். நீ அப்படிச் சொல்லக் காரண மென்னர் பூரீனிவாசனுக்கு உமது பேரில் இஷடமில்லையோ?

ராமன்: ஐயா! அவருக்குப் பிரியம் இருக்குமோ இல் லேயோ அதைப்பற்றி அவசியமில்லை. எனது எஜமான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/121&oldid=660501" இலிருந்து மீள்விக்கப்பட்டது