பக்கம்:இராஜேந்திரன்.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கெடுவான் கேடு நினைப்பான் 17;

இருந்த சோபாவில் உட்கார வைத்துவிட்டு மின்னார விளக்கை ஏற்ற, அங்கே வைத்திருந்த பித்தானை அமுக் கினர். அவருக்கு ஏற்பட்ட ஆச்சரியத்திற்கு அளவே யில்லே. தம்மைக் கல்யாணம் செய்துகொள்வதாய் முன்ல்ை ஒப்புக்கொண் டிருந்து பின்பு கிஷ்காரண மாய்த் தான் வேருெருவரைக் கல்யாணம் செய்துகொள் ளப் போவதாய்ச் சொன்ன, தன் பிராணனுக்குச் சமான மான லகஷ்மி தன்மேல் போர்த்துக்கொண் டிருந்த வெள்ளேப் பட்டுப் போர்வை பூராவும் ரத்தத்தில் முழுக்கி எடுத்ததுபோல் ரத்த மயமாயிருக்கவும், அவளுடைய இரு கைகளும் ரத்தமயமாக இருக்கவும் கண்டு திடுக்கிட்டார். இன்னதுதான் செய்வதென்று அவருக்குத் தோன்ற வில்லை. சீமைச் சாராயக் குடி மயக்கம் எங்கோ பறந்து விட்டது. அத்துடன் லக்ஷ்மி புத்தி சுவாதீனம் இல்லாமல் சித்தப் பிரமை அடைந்தவள் போல் இருந்தது அவருக்கு அதிக வருத்தத்தைக் கொடுத்தது. என்ன செய்வார் பாவம் - - -

சட்டென்று எழுந்ததும் ஜன்னலே இழுத்து மூடித் தாழ்ப்பாள் இட்டதோடு வெளியிலிருந்து யாராவது கூர்ந்து பார்த்தாலும் தெரியாதபடி ஜன்னலில் கட்டி யிருக்கும் பட்டுப் படுதாக்களையும் தொங்க விட்டுவிட்டுக் கதவையும் தாழ்ப்பாள் இட்டுவிட்டு லக்ஷ்மியின் மேலிருந்த ரத்தம் தோய்ந்த போர்வையைப் பிடுங்கி அங்கிருந்த தமது அழுக்குத் துணிப் பெட்டியில் போட்டு அதை மூடிவிட்டு, அங்கிருந்த முகம் கழுவும் எனுமல் பேசினில் தண்ணிர் கொண்டுவந்து லக்ஷ்மியின் கைகளைச் சரிவரக் கழுவச் சொல்லி, அவள் சித்தப்பிரமை கொண்டவள்போல் கழுவாமல் கின்றதால் தாமே கழுவிவிட்டு, லகதமி! லக்ஷ்மி என்னேப் பார். நான் யார் என்று உனக்குத் தெரியவில்லையா?” என்ருர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/170&oldid=660550" இலிருந்து மீள்விக்கப்பட்டது