பக்கம்:இராஜேந்திரன்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 இராஜேந்திரன்

அப்போது அவள் லக்ஷ்மியைப் பார்த்து என்ன லக்ஷ்மி, நான் உன் தாயார் கமலமல்லவா? நன்ருய்ப் பார், என், இவ்வாறு பேசுகிருய் இதோ ராஜம், வந்திருக்கிருள்: என்ருள். அப்போது லகழ்மி, "கமலம் - ராஜம் கமலம், ராஜம். இவர்கள் யார் ஆம், ஆம் கமலம்.ராஜம்-எங்கோ பார்த்திருக்கிறேன். எனக்குத் தெரிந்தவர்களாகத்தான் இருக்க வேண்டும், ஏன்! எனக்கு தெரிந்தவர்கள்தானே. நீங்கள் சொன்னல் எனக்குத் தெரிந்தவர்களென்று நம்பிக் கொள்கிறேன். ஏன் சொல்லுங்களேன்' என்று ரங்கநாத் திடம் கேட்டாள்.

ரங்கநாத்: லகஷ்மி நான் சொல்வதைக் கேள். இதோ: கிற்கும் கமலம்மாள்தான் உன் தாயார். அதோ கி ற்கும் ராஜம் உன்னே வளர்த்த அம்மாள். அவர்களே உனக்கு நன்ருய்த் தெரியும். இப்போது அவர்களுடன் நீ சென்று படுத்து உறங்கிக் காலேயில் எழுந்திருந்தால் உன் உடம்பு ஆரோக்கியமாக இருக்கும். என் சொல்லைத் தட்டாமல் தி அவர்களுடன் போ. -

அப்போது லக்ஷ்மி, என்ன எங்கே போகச் சொல்லு கிறீர்கள்? அவர்களுடன் நான் ஏன் போகவேண்டும்: என்று சொல்லிக்கொண்டே தன் கையைத் தன் முந்தாணி யின்மேல் வைத்தாள். ரத்த ஈரம் கையில் படிந்ததும், *இது என்ன ஈரம்? சிவப்பாயிருக்கிறதே ரத்தம்போல் அல் லவா இருக்கிறது என் முந்தாணியில் இல்லை; இல்லை; மேலெல்லாம் ரத்தம். எப்படி வந்தது ஒஹோ!! பூரீனி வாசன் ரத்தம்போல் இருக்கிறது. பூரீனிவாசன் ரத்தம் என் புடவையில் எப்படி வந்தது நான் ஏன் ரீனிவாசனிடம் சென்றேன்” என்று சற்றுத் திகைத்து கின்று, ஏன் போனெனென்று ெதரியவில்லை.ஆமாம் பூரீனிவாசன்கொலை செய்யப்பட்டான். அவன் சாகவேண்டியது கியாயந்தான். அப்பேர்ப்பட்ட மிருகம் உலகத்தில் இருக்கத்தகாது. நான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/173&oldid=660553" இலிருந்து மீள்விக்கப்பட்டது