பக்கம்:இராஜேந்திரன்.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போலீசாரின் ஆராய்ச்சி #33

இன்ஸ்பெக்டர். இந்தத் தடியனே என்ன செய்வது? அடே இந்தப்பாட்டி கதைகளேயெல்லாம் யாரடா உன்னேக் கேட்டார்கள்? எத்தனே மணிக்கு வந்தார் அதைச் சொல்லடா.

ராமசாமி. அதுதானே சொல்றேனுங்க. என் கிட்டக் கடியாரமா இருக்கு, எத்தனே மணிக்கு வக்தாங்கண்ணு சொல்றத்துக்கு வெத்திலே பாக்குப் போட்டுக்கிட்டு இருக் இறப்போ வண்டி வற சத்தம் கேட்டுதுங்க. சத்தம் கேட்ட வுடனே நான் எழுந்திருச்சு நிண்ணேனுங்க, நிஜமாங்க! வண்டி வரும்போது எழுந்திருச்சுத்தான் கிண்னேனுங்க. வண்டி வந்ததும் சின்ன எஜமானும் மேல்விட்டு எஜமானும் வண்டியிலிருந்து எறங்கினங்க: எறங்கினதும் மேல்வீட்டு எஜமான் அவுங்க வீட்டுக்குப் போனுங்க; அப்போ சின்ன எஜமான் அவுங்களேக் கையைப் பிடிச்சு உள்ளே இழுத் தாங்க, அவுங்க, வீட்டுக்குப் போகனு முண்ணுங்க. இவுங்க உடல்லே, உள்ளேயே கூட்டிக்கிட்டுப் போனுங்க.

இன்ஸ்பெக்டர். மேல் வீட்டு எஜமான் என்பது யார்? ராமசாமி என்னுங்க, இது தெரியாதா? கொழந்தைப் புள்ளே கேக்குருப்புலே கேக்கு நீங்களே? பால் குடிக்கிற கொழந்தைகளுக்குக்கூடத் தெரியுமே. அதோ கிக்கிருச் பாருங்க, காஷ்ப்ேபர் எஜமான்.

இன்ஸ்பெக்டர் உள்ளே போய் இருவரும் என்ன செய் தார்கள்? எத்தனே மணிவரையில் இருந்தார்கள்?

ராமசாமி: எத்தனே மணி வரைக்கும் இருந்தாங்கண்ணு சொல்ல எங்கிட்டக் கடியாரமா இருக்குங்கோ. பத்துப் பன்னிரண்டு மணிவரைக்கும் இருந்திருப்பாங்க.

இன்ஸ்பெக்டர் பத்துப் பன்னிரண்டென்மூல் எப்படி? பத்திருக்குமா? பதினென் றிருக்குமா? பன்னிரண் டிருக் குமா ? என்ன செய்துகொண் டிருந்தார்கள்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/182&oldid=660562" இலிருந்து மீள்விக்கப்பட்டது