பக்கம்:இராஜேந்திரன்.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போலீசாரின் ஆராய்ச்சி #5

பார்த்த பெண் அப் படத்திலுள்ள பெண்ணுகத்தான் அநேகமாக இருக்கலாம் என்று சொன்னன்.

லீலாவதியை விசாரிப்பதற்காக அவள்பேரில் சம்மன் போட்டு உடனே அவளே அழைத்துவரும்படி அந்த இன்ஸ் பெக்டரையே அனுப்பினர்கள். அவர் போய் விட்டில் விசா ரித்ததும் இன்ஸ்பெக்டர் படம் வாங்கிக்கொண்டு போன வுடனே லீலாவதி விட்டிற்கு வந்ததாகவும், அப்பால் ஒரு கிழவர் லீலாவதியுடன் சுமார் கால் மணி நேரம் பேசிக் கொண்டிருந்ததாகவும், உடனே லீலாவதியம்மாள் ஒரு பெட்டி நிறையத் துணி மணிகளும் நகைகள், ரொக்கம் முத லியுவைகளும் எடுத்துக்கொண்டு அக் கிழவர் வண்டியி லேயே ஏறிப் போனதாகவும், போகுமுன், தான் அயலூர் செல்வதால் வரச் சுமார் ஒரு மாதம் பிடிக்குமென்றும் யாரா வது தேடி வந்தால் ஒரு மாதம் பொறுத்து வரும்படி சொல் லச் சொன்னதாகவும் தெரிந்தது.

தன்னே ஏமாற்றிவிட்டுப் பறவை பறந்து போயிற்றென் பதை அப்போதுதான் அவர் உணர்ந்தார். கமிஷனர் அவர் கள் லீலாவதிக்குச் சலவை செய்யும் வண்ணுனே அழைத்து வந்தால் அவன் அத்துணிகள் யாருடையவை என்று சொல் வான் என்று சொன்னபடி, வண்ணுனே அழைத்துக் காண் பித்ததில் அவன் அத் துணிகள் லீலாவதியின் துணிகள் அல்லவென்றும் ராகவன் புத்திரியாகிய லகஷ்மியின் துணி கள் என்றும் சொன்னன். போலீஸ் கமிஷனர் இவ்வாறு விசாரித்துக்கொண் டிருக்கையில், தன் அறையில் அதிக விசனத்துடன் உட்கார்ந்திருந்த ரங்கங்ாத்தைப் பார்க்க ஒரு கிழவர் வந்தார். அப்போது இரவு மணி ஏழு. ரங்கநாத் அவரை உட்கார வைத்துத் தன்னிடம் பெரியவர் வந்த கார னம் என்னவென்று கேட்டார். அவர் ஒன்றும் பேசாமல் ஜேபியிலிருந்து ஒரு கடிதம் எடுத்துத் தர, அதில் பின்வரு மாறு எழுதியிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/194&oldid=660574" இலிருந்து மீள்விக்கப்பட்டது