பக்கம்:இராஜேந்திரன்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரதகஷிணையின் அல்ங்கோல்ம் 2:

இடத்திலிருந்து ஒர் அடி கூட எடுத்து வைக்காமல் நின்று கொண்டு பின் வருமாறு சொன்னன்.

ராஜா ராகவா, இதுவரையில் பெண்கள் என்ருல் விஷமென்று கினேத்திருந்த என் மனத்தை மாற்றுவதற் காகவே பாழும் பிரம்மன் அந்த ரமணி மணியைச் சிருஷ்டித் தான்போல் இருக்கிறது. ஐயோ! இதுவரையில் பாழும் மன்மதனுடைய புஷ்ப பாணங்களால் அடிபடாத என் தேகமானது திடீரென்று இன்று அப் பானங்களின் சரமாரியை எப்படிப் பொறுக்கும்? கண்பா இப்பேர்ப்பட்ட தீய எண்ணங்கள் என் மனத்தில் உதிப்பது சரியல்ல என்றும், பதிவிரதா சிரோமணியாகிய அம்மாதைப்பற்றி நான் நினேப்பதுவும் பாவம் என்றும் நன்ருய்த் தெரிந்த போதிலும், அவளேக் கண்ணுற்ற மாத்திரத்தில் இந்த கல் லெண்ணங்களெல்லாம் சூரியனேக் கண்ட பணிபோல் நீங்கி விடுகின்றனவே! என் செய்வேன். அவளைப் பார்த்தால் குல மாதாகத் தோற்றுகின்ருள். அவளோடு இருந்து என் காதல் தாகம் தனியாவிட்டால் என் பிராணன் கிற் காதுபோல் இருக்கிறது. என் உடல் பொருள் ஆவி மூன்றையும் இம் மனேன்மணியின் ஒரு தினத்திய ரமிப்புக் குத் தத்தம் செய்ய இதோ நான் தயார் ஆகா! என்ன நடை சின்ன இடை! பின்னல் ஐடை எத்துணே ரமணிய காந்தி! காதல் என்பது தெய்விக நிகழ்ச்சியோ ஆகா! என்னவென்று இயம்புவேன்! என் செய்வேன்; உனக்கோ ரெயிலுக்கு நாழியாய்விட்டது; நானே வரப்போவதில்லை; . ஆகையால் நீ உடனே போ. 'ν .

ராகவன்: ராஜூ! உன் பரிதாபமான நிலையில் நான் எப்படிச் செல்வேன். இன்றைத்தினம் நான் போகவில்லை; உன் புத்தி ஏதோ சற்றுச் சிதறிப்போயிருக்கிறது. ஆகை யால் உனக்கு கற்புத்தி புகட்டுவதற்காகவே நான் இருக்க வேண்டியது அவசியம். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/20&oldid=660400" இலிருந்து மீள்விக்கப்பட்டது