பக்கம்:இராஜேந்திரன்.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போலீசாரின் ஆராய்ச்சி 2.É.

§ བྱ་བ་ལྟ་

அடே திறப்பாயா, மாட்டாயா?" என்ருர் இன்ஸ்பெக் உர். பின்னும் திறக்க வில்லை; அதற்குள்ளாகப் போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தம் பேர்ட்டுக் கூப்பிட்டதையும் கத வைத் திறக்காததையும் கண்ட கமிஷனர் துரையவர்கள் மேலே வந்து, என்ன சமாசாரம்' என்ருர்,

'தடிப்பயல் உள் தாழ்ப்பாள் இட்டுக்கொண்டு கத வைத் திறக்காமல் இருக்கிருன்” என்ருர்.

மத்தியான்னம் திறந்த சாவியைக் கொண்டுவரச் செய்து திறந்து பார்த்தார்கள். தங்கள் போலிஸ்காரன் தான் கையும் காலும் கட்டுண்டு வாயில் பஞ்சடைத்து இருந்தானே தவிர வேறு யாரையும் காண்வில்லை. அவனைக் கட்டியிருந்த கட்டுகளே அவிழ்த்துவிட்டுச் சமாசாரம் கேட் டதில், அவன் நடந்த காரியாதிகளேச் சொன்னன். இன்ஸ் பெக்டர் பல்லே நற நறவென்று சத்தம் உண்டாகக் கடித்து, "அந்தப் பயல லேசில் விடக் கூடாது' என்ருர்,

கமிஷனர் துரையவர்கள், பிடித்த பிற்பாடல்லவா!' என்ருர், - .

அப்பால் லக்ஷ்மியையாவது கைதி ஆக்கிக்கொண்டு போக கினைத்து, எல்லோரும் அங்கே சென்ருர்கள். ராகவன், வந்த காரியம் என்ன?’ என்று விசாரித்தார். அவரிடம் லக்ஷ்மிக்குப் பிரதிகூலமான சாகதியங்களேயெல் லாம் சொன்னர்கள். பக்கத்து அறையில் இருந்து எல்லா வற்றையும் கேட்ட கம்லம்மாள் ஓவென்று கதறினுள்.

லக்ஷ்மியை எங்கே தேடியும் காணவில்லை. இங் கிருப்பாள், அங்கிருப்பாளென்று போலீசார் எங்குக் தேடிய பின், தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த கிழவி ஒருத்தி, சற்று நேரத்திற்கு முன்பு சங்கநாத் அந்தப் பக்கம் வந்ததாகவும் லக்ஷ்மி அவர்கூடச் சென்றதாகவும் இருவரும் ஒரு குதிரை வண்டி எறிச் சென்றதாகவும் சொன்னுள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/200&oldid=660580" இலிருந்து மீள்விக்கப்பட்டது