பக்கம்:இராஜேந்திரன்.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர்பாராத சம்பவங்கள் 227

வைத்திருந்த பொத்தானே அமுக்கினர். வீடு முழுவதும் வெளிச்சம் ஆகிவிட்டது.

வந்தவர் தாங்க்ள் இருக்கிறது வெளியில் தெரியுமோ என்று சுற்றிலும் பார்த்தார்.

அப்போது பெரியவர், ! ஐயா! தாங்கள் வீட்டிற்குள் வந்தபின்தான் கதவை மூடிவிட்டு வெளிச்சம் விட்டேன். ஆகையால் தாங்கள் இங்கே இருப்பதை யாரும் பார்க்க முடியாது. இப்போது வெளி ஜன்னல்கள் எல்லாம் நன் ருக மூடப்பட்டிருக்கின்றன. வெளி ஜன்னல்கள் மூடி யிருந்தாலும் உள் ஜன்னல்கள் வழியாகப் போதிய காற்று வரும். அதுவும் போதாதென்றல் மின்சாரப் பங்காக்கள் இருக்கின்றன. தங்கள் இஷ்டம்போல் செளக்கியமாக இருங்கள். இந்தச் சோபாவில் படுத்துக்கொள்ளுகிறீர்களா? அல்லது கட்டிலில் படுத்துக்கொள்ளுகிறீர்களா? தங்கள் இஷ்டம்போல் செய்யுங்கள். கதவை மூடிக்கொள்ளுங்கள். நான் சோபாவில் படுத்துக்கொள்ளுகிறேன்’ என்ருர்,

அவரும் அப்படியே உள் தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு படுத்துக்கொண்டார். அவர் படுத்த அரை மணி நேரத்தில், பெரியவர் குறட்டை விட்டுத் துரங்கினர்.

இக் கதையை வாசிப்போரில் பெரும்பான்மையோர் பழம் விற்று வந்தவர் துப்பறியும் கோவிந்தனென்று நாம் சொல்லாமலே ஏற்கனவே ஊகித்திருப்பார்கள். அவர் இங்கே அழைத்து வந்தவரிடம் ஏதோ கிரகிப்பதற்காக ஹிதம் பேசி, அவருக்குக் கொடுத்த பாலில் மயக்கத்தைக் கொடுக்கும் மருந்தைக் கலந்து கொடுத்து அழைத்து வந்தார். ஆதலால் அவர் மயக்கத்தோடு படுத்து உறங்குவ தானர். தமது ஜேபியில் இருக்கும் திறவுகோலால் உள் தாழ்ப்பாளேத் திறந்துகொண்டு வந்து சுமார் ஒரு மணி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/226&oldid=660606" இலிருந்து மீள்விக்கப்பட்டது