பக்கம்:இராஜேந்திரன்.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蠶尊 இராஜேந்திரன்

பின்னல் அதிக கஷ்டப்பட்டு அந்தச் சூட்சும அறை யைத் திறந்து பார்த்ததும் அவர் காடி வந்த பொருள் அங்கிருக்கக் கண்டார். உடனே அதில் உள்ள வஸ்துக்களே எடுத்துப் பார்த்துவிட்டு எப்படி இருந்ததோ அப்படியே வைத்துக் காகிதங்களே எல்லாம் அடையாளப்படி வைத்து, பெட்டியைப் பூட்டிச் சூட்சுமப் பொத்தானேயும் அமுக்கிக் காளிகாதேவியின் பாதத்தில் பெட்டியை வைத்துவிட்டு, காளிகா தேவியின்மேல் மூடியிருந்த துணியையும் போர்த்துவிட்டு வெளியே போய்த் தாழ்ப் பாள் போட்டுக்கொண்டு படுத்துக்கொண்டார்.

வந்தவர் செளக்கியமாக இரவெல்லாம் துரங்கிவிட்டுக் காலையில் எழுந்தார். எழுந்ததும் பொழுது விடிந்திருக்கக் கண்டு, திடுக்கிட்டு, அங்கும் இங்கும் சுற்றிப் பார்த்தார். எல்லாம் கிசப்தமாக இருந்தது. உடனே தம் பெட்டி இருக் கும் இடத்திற்குப் போய்த் திறந்து, பெரியவரே ! பெரியவரே!” என்ருர். அவர் தயாராகக் கறந்து காய்ச்சி வைத்திருந்த பாலேக் கொண்டுவந்து கொடுத்தார். அவருக்கு ஆட்சேபம் இல்லாவிட்டால் பக்கத்துத் தெரு வில் உள்ள காபி ஒட்டலில் இருந்து பொங்கல், உப்புமாவு, இட்டிலி, ஆமவ்டை முதலியவைகளே ஒர் ஐயரையே எடுத்து வரச் சொல்வதாகச் சொன்னர். அவர் வேறு ஆள் வருவதற்குச் சம்மதிக்காமல் பெரியவரையே வாங்கி வரச் சொன்னுர்.

அவர், ஐயரையே வைக்கச் சொல்லித் தொடாமல் எடுத்து வருவதாச் சொல்லிப் போய், அப்படியே கொண்டு வந்து கொடுக்க, தினசரிப் பத்திரிகைகள் அகப்பட்டால் வாங்கி வரச் சொன்னர். பெரியவர் பக்கத்துத் தெருவில் அகப்படும் என்று சொல்லிப் போய் ஐந்து நிமிஷங்களில் சகல பத்திரிகைகளேயும் கொண்டு வந்து கொடுத்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/229&oldid=660609" இலிருந்து மீள்விக்கப்பட்டது