பக்கம்:இராஜேந்திரன்.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர்பாராத சம்பவங்கள் 231

೨)ಣಮಿರ್ಜಿ ೯ುಖT முற்றும் வாசித்தார். பின், தாம் எழு துவதற்குக் கொஞ்சம் காகிதம், கவர், மைக்கூடு, பேனு: முதலியவைகள் கொண்டுவரச் சொல்லிக் கடிதம் எழுதினர்:

அன்பார்ந்த கனம் ஐயா,

நாம் தீர்மானித்துக்கொண்டபடி எவ்வளவு நல்ல தனமாகக் கேட்டுப் பார்த்தும் வழிக்கு வராமல் ஒரே பிடி வாதமாக முரண்டினதோடு என்னேக் கொல்லவும் பார்த் தான். தன்னக் கொல்ல வந்த பசுவையும் கொல்லலாம் என்பதற்கு ஏற்பக் காரியங்கள் நடந்ே தறி விட்டன. நம் ஒருவரை இழக்கும்படி நேரிட்டதைப்பற்றி இனி விசனப் படுவதில் பிரயோஜனம் இல்லை. தாங்கள் விசனத்தை விடுங் கள். நல்ல வேளேயாக ஒரு முட்டாள் கிழவன் எனக்கு அகப்பட்டு, அவன் வீட்டில் செளக்கியமாக எவருக்கும் தெரியாமல் கான் இருக்கிறேன். அக் கிழவன் எனக்கு வேண்டியவைகளேச் சரிவரச் செய்து வருகிருன். இன்று. இரவு எட்டு மணிக்கு நமது ரூபாய்களே எல்லாம் எடுத்துக் கொண்டு இக் காகிதம் கொண்டுவரும் கிழவனுடன் வங் தால் அவன் நான் இருக்கும் ஜாகைக்கு ரகசியமாக அழைத்து வருவான். நாம் முன் தீர்மானித்த பிரகாரம் பங்கு போட்டுக்கொண்டு சமாசாரம் வெளிப்படுமுன் ஒடிப் போய்விட வேண்டும்.

எப்போது நமது லீலாவதியே நமக்கு விரோதமாக ஏற்பட்டு விட்டாளோ இனி இங்கிருக்கும் ஒவ்வொரு நிமிஷ் மும் நமக்கு ஆபத்தை விளேவிக்கும், நாம் இருவரும் இப் போது ஓடிப் போய்விட்டால், கிழவியைப் பின்னல் வர ஏற் பாடு செய்வோம். என் வார்த்தையைத் தட்டாமல் கணக்கு முழுவதையும் எடுத்துக்கொண்டு கணக்குகளின் பிரகாரம் அணு பைசாவுடன் ரொக்கம் எடுத்து வந்தால் இன்று இரவே ஒன்பதரை மணிக்கு ஒடிப் போய்விடலாம்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/230&oldid=660610" இலிருந்து மீள்விக்கப்பட்டது