பக்கம்:இராஜேந்திரன்.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 இராஜேந்திரன்

யுங்கூடக் கொல்லப் பார்த்தாயே! நீ இன்னும் ஏழு ஏழு காற்பத்தொன்பது ஜன்மங்களுக்கு நரக பாதையே அநுபு விப்பாய்!” என்று சொல்லிவிட்டுத் தன் பர்த்தாவின் பிரே தத்தின்மேல் விழுந்து ஒப்பாசி வைத்து அழுவதாள்ை.

வேதவல்லியின் கண் முன்பாகவே அவளது கணவன் கொல்லப்பட்டுக் கிடக்கிருன் ஏற்கனவே அவளுடைய மற்ருெரு மகனும் கொலேயுண்டு போனன். உயிரோடு இருந்த பூரீனிவாசனும் இப்போது கையும் மெய்யுமாகப் பிடிபட்டுத் தூக்குத் தண்டனேக்குத் தப்ப முடியாதவன் ஆன்ை. இவ்வளவு பேர்களும் மகா பரிசுத்தவான் ஆகிய ராஜேந்திரனேக் காலமெல்லாம் வஞ்சித்து, சிறுகச் சிறுக அவரது திரவியங்களே எல்லாம் கொள்ளே கொண்டு அம் மட்டில்கூடத் திருப்தி அடையாமல், ராஜேந்திரன் பெய ருக்கே ஒரு பெரிய களங்கம் உண்டாகும்படியாக, வைரங் களேயும் களவு செய்து லகடிக்கணக்கான தொகைகளையும் அபகரித்து, இவ்வளவு அக்கிரமங்களே கடத்திவிட்டு, தாங் கள் அவற்றைக் கொண்டு சுகமாகப் பல நூறு வருஷங்கள் வரையில் வாழ்ந்திருக்க கினேத்தார்கள்.

இங்கேதான் நமது வாசகர்கள் முக்கியமாக அறிந்து கொள்ள வேண்டிய படிப்பினே ஒன்று இருக்கிறது. இவ் வளவு தூரத்திற்கு அவர்களின் திச் செயல்கள் தங்கு தடை இன்றி, கிர்விக்கினமாக யாதொரு இடையூறும் இல்லாமல், தெய்வமே அவர்கள் பங்கில் இருப்பதாக அவர்கள் கருதும்படியாக அவர்கள் கினேத்தபடி எல்லாம் நடந்து விடும் வண்ணமாகச் செய்வித்து வந்த கடவுள் . அவர்கள் எவ்வளவு தூரம் பாவ மூட்டைகளேச் சுமந்துகொள்ள முடி யுமோ அவ்வளவுக்கும் தாராளமாக விட்டுக்கொடுத்து வந்த கடவுள்-கடைசியில் ஒரே அடியாக அவர்கள் அத்தனே பேரையும் பாதாள லோகத்தில் அமிழ்த்தி, அவர்களுக் குள்ளாகவே விரோதங்களும் கொலேகளும் உண்டாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/241&oldid=660621" இலிருந்து மீள்விக்கப்பட்டது