பக்கம்:இராஜேந்திரன்.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 இராஜேந்திரன்

கிக்கப்பட்டது என்பது ஒன்று. ராஜேந்திரன் எடுத்திருங் தால் அரக்கு முத்திரையை எடுத்து எறிந்துவிட்டு வேறு முத்திரையைத் தாராளமாகப் போட்டிருக்கக் கூடுமென் அம், அப்படிப் போடாமல் அதிக சிரமத்துடன், பழைய அரக்கு முத்திரையை எடுத்து, எடுத்தது தெரியாமல் மறு படியும் அதையே வைத்திருப்பதால் அதைத் திறந்தது ராஜேந்திரன் அல்லவென்றும் கண்டுகொண்டேன். ஆகவே, அந்தச் சாவியால்தான் பெட்டி திறக்கப்பட்டது. என்று தெரிந்துவிட்டது. யார் திறந்தார்கள் என்று கண்டு பிடிக்க வேண்டி யிருந்தது.

அப்பால் மார்-ா-யூரீ ராஜேந்திரனே விசாரித்ததில் அவருக்கு எவ்விதமான பணக் கஷ்டமும் இல்லையென்றும், தனக்கு இன்ன இன்ன பாங்கிகளில் இவ்வளவு இவ்வளவு பெருந் தொகைகள் வர வேண்டி இருக்கிறதென்றும் சொன்னர். அந்தப் பாங்கிகளில் எல்லாம் விசாரித்ததில் அவர் சொன்னது முற்றும் உண்மையெனத் தெரிந்ததால், அவரால் பெட்டி திறந்து எடுக்கப்படவில்லை என்றும் அவ குக்குத் திருட்டைப்பற்றிய சமாசாரமே தெரியாது என்றும் திட்டமாய் ஊர்ஜிதப்படுத்திக்கொண்டேன்.

அவருக்குப் பண நெருக்கடி கிடையாது என்றும், ஆல்ை ருக்மிணி பாங்கிக்கு மட்டும் பண நெருக்கடி உண்டு என்றும் அதன் கணக்கை அவர் விவரித்துச் சொன்ன போது அவர் குமாரனை பூரீனிவாசன் பாங்கியிலிருந்து சுமார் பதிறைரை லட்சம் ரூபாய்கள் உண்டியல்கள் கொடுத்து வாங்கினதையும் அந்த ரூபாய்களெல்லாம் கோபாலாச்சாரியார் அண்டு சன்ஸ்-க்கே போயிருக்கிற தென்பதையும் சொன்னர். உடனே பூரீனிவாசனேயும் கோபாலாச்சாரியார் அண்டு சன்ஸையும்பற்றி விசாரிக்கக் குறிப்பு எழுதிக்கொண்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/245&oldid=660625" இலிருந்து மீள்விக்கப்பட்டது