பக்கம்:இராஜேந்திரன்.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவிந்தன் விவரித்துச் சொல்லல் 247

அப்பால் ரங்ககாத் என்ன அவசர ஜோலியாகப் போளுர் என்றும், அன்று இரவை அவர் எப்படிச் செலவ ழித்தார் என்றும் கண்டுகொள்ள வேண்டுமென்று எழுதிக் கொண்டு, அவ்விதமே அவரைப் பின்பற்றிச் சென்று, லீலாவதிக்கும் அவருக்கும் நடந்த சம்பாஷண்ைகளே எல் லாம் கேட்டேன். அப்பால் கோபாலாச்சாரியார் குமாரனை கிருஷ்ணமாச்சாரி, பாங்கியில் திருட்டுப்போன விஷயம் வெளிக்குத் தெரியாத முன்னமே செய்த ஆர்ப்பாட்ட்த்தை யும், ருக்மிணி பாங்கியார் பணம் கொடுப்பார்களோ கொடுக்க மாட்டார்களோ என்று தம் தகப்பனர் சந்தேகித் துச் சொன்னதாகச் சொன்னதையும், அப்பால் ரங்கநாத் துக்குக் கிருஷ்ணமாச்சாரி பத்தாயிரம் ரூபாய் கொடுப்பதா கவும் அதைப் பெற்றுக்கொண்டு எங்காவது ஒடி ஒளிந்து கொள்ளும்படியும் சொன்னதில், அவ்விதமே ரங்கநாத் செய் திருந்தால்-எல்லோரும் ரங்கநாத்தைப் பாங்கியின் கன வில் சம்பந்தப்பட்டதால் ஓடிவிட்டதாக நினைக்கக் கூடு மானதால்-அப்படித் தந்திரமாக ரங்கநாத்தின்மீது பழி ஏற்றப் பார்ப்போது தன்மையும் செயல்களும் எவ் வாறு இருக்க வேண்டும் என்றும் சிந்தித்ததில், அவர்கள் பேரில் ஏற்கனவே தோன்றிய சந்தேகம் இன்னும் பலப் பட்டது.

ராகவனே அழைப்பித்து அவரிடம் நேரில் பேசியதில் இருந்து அவரும் நிரபராதியாக இருக்கக் கூடுமென்று என் மனத்தில் தோன்றியது. காரணம்: அவர்பேரில் சங் தேகிக்க எவ்வித கியாயமும் இல்லாததுதான். அப்பால் ராகவன் ரங்கநாத்பேரில் சந்தேகித்ததற்குக் காரணங்கள் சொன்னபோது ரங்கநாத்தின் குணம், மூன்று மாத s: மாக மாறி யிருப்பதாகத் தெரிந்தது. அதற்குக் கர் தெரிந்துகொள்ள வேண்டுமென்று அதையும் குறித்துக் கொண்டேன். பிறகு ராஜேந்திரனின் அந்தரங்கவேல்க்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/246&oldid=660626" இலிருந்து மீள்விக்கப்பட்டது