பக்கம்:இராஜேந்திரன்.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25;} இராஜேந்திரன்

டியே தெரியும் என்றும் வைரங்கள் போனது தெரியாது என்றும் ஊகித்தேன். அப்பால் லீலாவதிக்குத் திடீ ரென்று ஐம்பதாயிரம் ரூபாய்கள் எங்கிருந்து வந்ததென்று கவனிக்க வேண்டுமென்றும் குறிப்பு எழுதிக்கொண்டேன்.

இத் திருட்டை நீங்கள் செய்யவில்லை என்றும், இன் ஞர்தான் செய்தார்கள் என்றும் நான் ரூபித்தால் அப்போது என்னைக் கல்யாணம் செய்துகொள்கிறீர்களா? என்று லீலாவதி கேட்டதில் இருந்தும், ரங்கநாத் வெளியே சென்ற வுடனே பூரீனிவாசன் அவளைப் பயமுறுத்தியதில் இருந்தும், திருடினது இன்னரென்று லீலாவதிக்குத் தெரியுமென்றும் ஊகித்தேன். அன்றைய முதல், ரீனிவாசன், ரங்கநாத், லீலாவதி, கோபாலாச்சாரி, லக்ஷ்மி, அவள் தாயார் ஆகிய இவர்கள் எல்லோரையும் நானும் எனது ஆட்களும் வேவு பார்த்து வந்தோம். இரண்டாம் அத்தியாயத்தில் சொன்ன விளம்பரங்கள் வெளிவந்த பத்திரிகைகளின் ஆபீஸ்களில் போய் அவ் விளம்பரங்களேப் போடும்படி கொடுத்தவர்கள் யார் என்று விசாரித்ததில் கோபாலாச்சாரியார்தாம் போடும்படி செய்தாரென்று தெரிந்தது. -

அப்பால் ரங்கூனில் இருக்கும் எனது நண்பருக்குத் தந்தி அடித்து வேதவல்லி யம்மாளும் பூரீனிவாசனும் மாண்ட் கோமெரி ரோட் 111-ம். நெம்பர், விட்டில் எவ்வளவு காலமாக வசித்து வந்தார்கள் என்றும், எங்கிருந்து வக் தார்கள் என்றும் அவர்களேப்பற்றிய முழு விவரங்கள் விசாரித்து எழுதும்படி கேட்டிருந்தேன்.

அவர் விசாரித்ததில் மேற்சொன்ன விட்டில் வேத வல்லியும் பூரீனிவாசனும் ஒரே ஒரு வாரந்தான் இருந்தார் கள் என்றும், அவர்கள் அதற்கு முக்திய வாரத்தில் வந்த, ஜைடா என்னும் கப்பலில்தான் சென்னேயில் இருந்து வந்ததாகவும், அதற்கு முன்னுவது பின்னவது அவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/249&oldid=660629" இலிருந்து மீள்விக்கப்பட்டது