பக்கம்:இராஜேந்திரன்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 இராஜேந்திரன்

வது தவருகுமோ அது சரியாகவே இருக்கட்டும், தவரு கவே இருக்கட்டும்; என்னுல் இனி இந்தத் தாபம் சகிக்க முடியவே முடியாது.'

என்று இவ்வாருக இரவெல்லாம் நல்ல எண்ணங்களும் கெட்ட எண்ணங்களும் மாறி மாறி வர, சாதாரணமாய்க் கெட்ட எண்ணங்களே பெரும்பான்மையோரிடம் ஜயமடை வதுபோல் கமது ராஜூவின் மனத்தையும் வசமாக்கி விட்டன. உடனே தன் நண்பனே அழைத்து இவ்விஷயத் தில் அதுகூலம் அடைவதற்கு எவ்வாறு வேலே செய்யலா மென்று யோசிக்கலானன். இருவரும் அது வரையில் இப்பேர்ப்பட்ட தீய வழிகளில் பிரவேசித்தவர்கள் அல்ல வாதலால் ஒருவர் ஒரு மாதிரி சொல்வது; மற்றவர் அதில் நேரிடக்கூடிய இடையூறுகளேச் சொல்வது; அப்பால் மற்றவர் ஒரு மாதிரி சொல்வது; அதில் வரக்கூடிய கஷ்டங் களே முதலில் சொன்னவர் சொல்வது ஆக இப்படியே யோசித்து யோசித்து யாதொருவிதமான தீர்மானத் திற்கும் வருமுன் சூரியோதயம் ஆகிவிட்டது. அவர் கள் விசனத்தைத் தீர்ப்பதற்காகவே சனி சுவரன் பிராம்மண உருக்கொண்டு வந்ததைப்போல் கறுத்த தேகமும் துவாதச நாமமும் போட்ட கோபண்ணு என்பவர் அவர்கள் இருக்கும் ஜாகைக்கு வந்து தமது இடது கையால் ஆசிர்வாதம் செய்து விட்டு, ரங்கநாதா!' என்று சொல்லி யாரும் உட்காரச் சொல்லுமுன் தாம் மேல்போட்டிருந்த ஒரு சிறு துவாலே விரித்து அதன் மேல் செளக்கியமாய் உட் காாகதாா.

ராகவன்: ஸ்வாமி தங்களுக்கு எந்த ஊர் தாங்கள் என்ன ஜோலியாய் இங்கே வந்தீர்கள்?

கோபண்ணு: நான் எங்கு எங்கு இருக்கிறேனே. அதெல் லாம் என் ஊர்தான். தற்காலம் என் ஊர் பூநீரங்கந்தான். எனக்கு உபாயமாய் ஆரூடம், ஜோஸ்யம் முதலியன தெரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/25&oldid=660405" இலிருந்து மீள்விக்கப்பட்டது