பக்கம்:இராஜேந்திரன்.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவிந்தன் விவரித்துச் சொல்லல் 253

வைரங்களும் கோட்டுகளும் பாங்கியின் முன் வrசல் வழியர்க வாவது சாஜேந்திரன் வீட்டின் வழியாக வாவது போகவில்லை. ஆகையால் ராகவன் படுக்கை அறையின் வழியாகத்தான் போயிருக்க வேண்டுமென்று நினைத்து ராகவன் வீட்டில் உள்ள ஒரு பெண் வேலைக்காரியை ரஜா எடுத்துப் போகச் செய்து அவளுக்குப் பதிலாகத் துப்பறி யும் என் பெண் ஆட்களில் ஒருத்தியை அங்கே வேலேக்கு வைத்துக் கமலத்தையும் லகஷ்மியையும் ஜாக்கிரதையாகக் கவனிக்கும்படி செய்ததில் அவர்கள் இருவரும் ரக்சியமாகப் பேசிய சம்பாஷனே முழுவதையும் கேட்டு என்னிடம் தெரிவித்தாள்.

அங்குள்ள பாராக்காரனேக் கமலம்மாள், திருட்டுப் போன அன்று இரவு 8.மணிக்கு மருந்து ஷாப்புக்குப் போகும்படி அனுப்பின தாகவும், அவன் மருந்து வாங்கிக் கொண்டு இரவு 11-மணிக்குத்தான் வந்ததாகவும், அதற் குப்பின், விட்டிற்குள் இருந்து வெளியில் ஒன்றும் கொண்டு போகப்படவில்லை என்றும் சொன்னுன் ஆதலாலும், ராக் வன் எங்கே வந்து விடுகிருரோவென்று கமலம்மாள் உத்தர வின் பிரகாரம் லகஷ்மி வெளியிலிருந்து பார்த்திருந்ததாகவும், அப்போது கமலம்மாள், கோபாலாச்சாரியார் பேசிய கொடுர மான வார்த்தைகளால் மயக்கம் அடைந்ததாகவும், மூர்ச்சை தெளிந்து எழுந்தபோது கோபாலாச்சாரியார் மாத்திரம் இருந்ததாலும், கிருஷ்ணமாச்சாரியார் டாக்டரை அழைத்து வரப் போனதாகக் கோபாலாச்சாரியார் சொன்னதில் இருந்தும், கோபாலாச்சாரியும் கிருஷ்ணமாச்சாரியும் திரு டிக் கிருஷ்ணமாச்சாரியிடம் கொடுத்து அனுப்பி இருக்க வேண்டுமென்றும் ஊகித்தேன்.

பின்னல் லீலாவதி பேசியதில் இருந்து அவளுக்கு வைரங்கள் திருட்டுப்போன விஷயம் தெரியாதென்றும் நினைத்தேன். மறு நாள் அவள் கோபாலாச்சாரியிடமும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/252&oldid=660632" இலிருந்து மீள்விக்கப்பட்டது