பக்கம்:இராஜேந்திரன்.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 இராஜேந்திரன்

கிருஷ்ணமாச்சாரியிடமும் சென்று வைரங்களேத் திருப்பி அனுப்ப வேண்டுமென்றும், அப்படி அனுப்பாவிட்டால் தான் உண்மையை வெளிப்படுத்துவதாகவும் சொன்னதை யும், அவர்கள் பூநினிவாசனுடன் கலந்து பேச வேண் டும்ென்று சொன்னதையும், அப்பால் லீலாவதி ரகசிய மாக ரீனிவாசனிடம் அவ் விஷயத்தைப்பற்றிப் பேசிய தையும் அதற்கு அவன் ஒப்பாமல் மறுத்துக் கூறி, பிறகு சம்மதித்தவன்போல் அபிநயித்து, கோபாலாச் சாரியிடம் இருந்து ராஜேந்திரனுக்கு யார் அனுப்பினர்கள் என்று தெரியாமல் வைரங்களே அனுப்பிவிட எடுத்துப் போவதாகச் சொல்லி, வீட்டிற்குக் கொண்டுபோனவன் என்ன செய்தான் என்று தெரியாமல் ஒளித்துவிட்ட தாகவும், பின்னுல் லீலாவதியும் கோபாலாச்சாரியும் கிருஷ்ணமாச்சாரியும் பல தடவைகளில் கேட்டும் சரியான பதில் சொல்லாததால், கடைசியாகப் பயமுறுத்தி யாவது வாங்கும்படியும், கொடுக்காவிட்டால் கொன்று விடும்படியும் கைத் துப்பாக்கி சகிதம் கிருஷ்ணமாச்சாரியை அனுப்பியதாகவும், கிருஷ்ணமாச்சாரி வந்தபோது ரங்கநாத் தும் பூரீனிவாசனும் சீட்டு விளேயாடிக்கொண் டிருந்ததால் வெளியே காத்திருந்த தாகவும் அப்பால் லக்ஷ்மி ரீனிவாச னிடம் வந்து, தன்னல் அவரைக் கல்யாணம் செய்து கொள்ள முடியாதென்றும், பாங்கியில் திருடியது பூரீனிவா அன்தான் என்று தான் சந்தேகிப்பதாகவும் தன்னைத் தன் இஷ்டம்போல் ரங்கநாத்தைக் கல்யாணம் செய்துகொள்ள விடாவிட்டால் மறு நாள் போலீசுக்குத் தெரிவிப்பதாகவும் பயமுறுத்திள்ை.

'குற்றமுள்ள நெஞ்சு குறுகுறு எனனும' எனபது போல் லகடிமி சொன்ன வெறும் வார்த்தைகள் பூரீனிவாசன் மனத்தில் புகுந்து துளைத்ததால் யோசித்துச் சொல்வதா கச் சொன்னன். அவள் போனதும் லீலாவதி வந்து மன்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/253&oldid=660633" இலிருந்து மீள்விக்கப்பட்டது