பக்கம்:இராஜேந்திரன்.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவிந்தன் விவரித்துச் சொல்லல் 255

டிக் கேட்டுப் பின்-பயமுறுத்தினுள். மறு நாள் சாயங் காலத்துக்குள் வைரங்களே ராஜேந்திரனுக்கு அனுப்பி விடுவதாகவும், அப்படிச் செய்யாவிட்டால் மூன்ரும் நாள் போலீசாரிடம் சொல்லும்படியும் சொல்லி பூரீனிவாசன் அவளேச் சமாதானப்படுத்தி அனுப்பிவிட்டான். அவள் போன பின் கிருஷ்ணமாச்சாரி போய்ப் பேசிக்கொண் டிருக் கும்போதே, லகஷ்மி மறுபடியும் வந்து ஜன்னல் பக்கத்தில் ஒண்டி நின்று அவர்கள் பேசுவதைக் கேட்டாள். விஸ்த ரிப்பானேன்!

அண்ணன், தம்பிகள் இருவருக்கும் வார்த்தைகள் வள ரவே யூரீனிவாசன் சம்மதித்ததைப்போல் அபிநயித்து, அதோ இருக்கிறது வைரங்கள், எடுத்துக்கொள்'

என்ருன்.

அறை பூட்டி இருந்ததால் உள்ளே என்ன நடந்த தென்று நான் பார்க்கவில்லை. ஏதோ பயங்கரமான சத்தம் மட்டும் கேட்டது. ஐந்து நிமிஷங்களில் பூரீனிவாசன் விக்கிரகத்தை எடுத்துக் கொண்டு வந்து பக்கத்துத் தெரு வில் உள்ள வீட்டிற்குள் சென்ருன். நான் அதுமுதல் அவ னுக்குக் காவல் இருந்தேன்.

காலையில் வேறு காவல் வைத்துவிட்டு, விசாரித்ததில் லக்ஷ்மிக்குப் புத்தி மாருட்டமாக இருப்பதாகவும், ரங்கநாத் அறைக்கு அவள் போனதையும் தெரிந்துகொண்டு, கவனித் ததில் இன்ஸ்பெக்டர் கப்பராயலு காயுடு செய்த காரியாதி கர்ேத் தெரிந்து, வைரங்கள் எங்கே இருக்கின்றன என்று அறியுமுன் லீலாவதியைப் பிடித்து இம்சித்துக் கேட்டால் வைரங்கள் சாட்சி ருஜுவுடன் அகப்படாவென்றும் திட்ட மாகத் தெரியும்வரையில் லீலாவதியை இன்ஸ்பெக்டர் கையில் அகப்படாதபடி செய்வதற்காகவும் அவளத்தப்பு வித்தேன். - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/254&oldid=660634" இலிருந்து மீள்விக்கப்பட்டது