பக்கம்:இராஜேந்திரன்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரதrதிணையின் அலங்கோலம் 27

யும். காலேயில் எழுந்து தங்களேப்போல் ஒத்த கனவான் களிடம் சென்று தெரிந்த வரையில் ஆரூடமாவது ஜோஸ்ய மாவது பார்த்துச் சொன்னல் அவாளவாள் கொடுத்ததைக் கொண்டு உபாய ஜீவனம் செய்துகொண்டு ரங்கநாதனேச் சேவித்துக்கொண்டு வருகிறேன். நாளது வரையில் ரங்க நாதன் எனக்கு யாதொரு குறையும் வைக்கவில்லே. இனி மேலும் குறைவு வரும்படி பார்க்கமாட்டார். -

ராகவன். சுவாமி! நாங்களெல்லாம் வானசாஸ்திரம் முதலியவை நன்ருய் வாசித்தவர்கள்; ஆகையால் எங்களி டம் உமது ஜபம் சாயாது. அவிவேகரிடம் போய் உமது முட்டையை அவிழ்த்தால் அவர்கள் ஏமாறுவார்கள். -

கோபண்ணு. தாங்கள் ஏதோ வானசாஸ்திரம் என்று. ஒன்று படித்துவிட்டதால் கிரகங்கள் மாறுகிறதென்றும்,கிர கனமென்பது புரட்டு என்றும், கிரகங்களின் பாதை மனிதர் களுக்குக் கிடையாதென்றும், கிரகங்களைக் கொண்டு ஒன் ஆறும் சொல்ல முடியாதென்றும் நினைத்துக்கொண்டு அச் சாஸ்திர விற்பன்னரை யெல்லாம் மூடரென்றும் புரட்டர்க ளென்றும் நிச்சயித்துவிடுகிறீர்கள். எங்களால் கணிக்கப் பட்ட பஞ்சாங்கங்களின்படி அந்த அந்தக் காலங்களில் கிர கணங்கள் தோன்றுதல் முதலியன நடந்தேறவில்லையா? தக்க தனவந்தர்கள் இருந்து பூர்விக சாஸ்திரங்களே ஆதரித் தாலன்ருே அவை செழிக்கும்; எதுவும் ஆராய்ந்து பார்த் தால்தான் உண்மையென்றும் அல்லவென்றும் புலப்படும். இப்போதுதான் என்ன? நீங்கள் எனக்குப் பணம், காசு ஒன்றும் கொடுக்க வேண்டாம். ஏதோ உங்கள் மனத்தில் தோன்றினதை நினைத்துக்கொண்டு என்ன ஆரூடம் கேளுங்கள். நான் சரிவரச் சொன்னல் ஏதோ கிஞ்சித்து இனம் கொடுங்கள். இல்லாவிட்டால் என்னேச் சும்மா அனுப்பி விடுங்கள்.

ராஜா: ஸ்வாமி! ஏதோ பிரமாதமாய்ப் பேசுகிறீரே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/26&oldid=660406" இலிருந்து மீள்விக்கப்பட்டது