பக்கம்:இராஜேந்திரன்.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடவுளை நம்பினுேர் கைவிடப்பட்ார் 255

சகோதரனேயும் தகப்பனேயும் கோரமாகக் கொலே செய்து போலீஸ் பந்தோபஸ்தில் இருக்கும் வரையில் சொல்லி முடித்து, அப்பால் தனக்கும் ருக்மிணிக்கும் பிறந்ததாக எண்ணி இருந்த பிள்ளேயும், ருக்மிணியின் பிள்ளை அல்ல என்று தெரிந்தது முதல்... என்று முடிக்கும் முன் வண்டி கோவிந்தன் வீட்டண்டை கின்றது.

வண்டியில் இருந்து இறங்கி விட்டிற்குள்ளே போய்க் கொண்டிருக்கும்போதே, நீனிவாசன் தங்கள் பிள்ளே அல் லவென்று தெரிந்தது முதல், ராஜேந்திரன் ருக்மிணியைப் பற்றியே விசனப்பட்டு, நேற்றிரவு பிரான மூர்ச்சை அடைந்து டாக்டர்கள் எவ்வளவு மருந்துகள் கொடுத்த போதிலும் மூர்ச்சை ெ தளியவில்லை என்றும், ருக்மிணி' என்ற வார்த்தைதான் அவர் பேசிய கடைசி வார் த்தை என்றும், இனி மூர்ச்சை தெளிவதே சந்தேகம் என்று டாக்டர்கள் சொல்லுகிருர்கள் என்றும் சொன்னுர்,

அதுவரையில் பேசாமல் மெளனமாக இருந்த வரதாச்

சாரியுடன் வந்த பெண், அவர் எங்கே இருக்கிருர்' எனருள.

கோவிந்தன், இந்த அறையில்தான் அகோ அந்தச் சோபாவில் மூர்ச்சையாகக் கிடக்கிருர், அவரைக் கொன் றது. ருக்மிணியே ஒருகால் அந்த ருக்மிணியே இப்போது வந்து அவரைத் தட்டி எழுப்பி அவளுடைய இனிமை யான குரலுடன், அவரிடம் பேசில்ை பிரக்ஞை வரும் என்று டாக்டர்கள் சொல்லுகிரு.ர்கள். இப்போதாவது அந்த ருக்மிணி யம்மாளுக்குத் தயவு வருமோ, வராதோ' என்று அவர் வாக்கியத்தைப் பூர்த்தி செய்யுமுன் கதவைத் திறந்ததும், வந்த பெண், நாதா இந்த ஸ்திதியிலா தங்க்ளே நான் சக்திக்க வேண்டும்!” என்று சொல்லிக்கொண்டே அவர்மேல் போய் விழுந்து கண்ணிர் உகுத்தாள். அவள் கூடவே உள்ளே போகப் போன வரதாச்சாரியாருக்குச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/264&oldid=660644" இலிருந்து மீள்விக்கப்பட்டது