பக்கம்:இராஜேந்திரன்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரதrதிணையின் அலங்கோலம் 33

ரங்கம்மாள்: ருக்கு பக்கத்தாத்திலிருந்து இன்று லட்சுமி வந்தாளே, பார்த்தாயார் அவள் புஷ்பவ தியானதும் புருஷன் விட்டார் 500 ரூபாய் கொடுத்தால்தான் சாந்திக் கல்யாணம் செய்வதாகச் சொன்னர்கள். அவள் பெற் ருேர்கள் கோகர்ணம் கஜகர்ணம் போட்டுப் பார்த்தார்கள். ஒன்றிலும் பலிக்கவில்லை. கடைசியாக முகுந்தராயபுரம் ராஜா பூரீ ரங்கநாதரைச் சேவிக்க வந்தபோது அவரிடம் ஒரு ராத்திரி அந்தப் பெண்ணே அனுப்பி இருக்கச் செய்து 500 ரூபாய் வாங்கிச் சாந்திக்கல்யாணம் நடத்தினர்கள். கல்யாணத்திற்கும் பணம், வரிசைகளுக்கும் பணம், சாந்திக் கும் பணம், சகலத்துக்கும் பணம், என்று கேட்கும் இந்த நாளில் இப்படிச் செய்வது சர்வ சாதாரணமாக இருக்கிறது. ருக்மிணி. அம்மா, லகஷ்மி தன் மானத்தை விற்று அத் தொகையைக் கொண்டு சாந்தி பண்ணிக்கொண்டதை விட அவளுக்கு விழுந்து சாக ஒரு குளம் குட்டை இல்லா மல் போயிற்ரு பூநீரங்கத்தைச் சுற்றிலும் ஜலம் போகும் போது அவளுக்குச் சாக வழி தெரியாமற் போனதென்ன? ஐயோ! இப்பேர்ப்பட்ட காரியம் செய்துவிட்டு அவள் எப் படித்தான் நாலு பேருக்கு மத்தியில் ஒரு மனுவியைப் போல் வாழ்கிருளோ தெரியவில்லை!

ரங்கம்மாள்: ருக்கு உனக்கு இன்னும் உலக அது பவம் இல்லாததால் இப்படிப் பைத்தியக்காரத் தனமாய்ப் பேசுகிருய். உனக்கும் அவசியம் நேரிட்டால் அப்போது தான் தெரியும். என்னடி நாய் விற்ற காசு குலைக்குமா? ஏதோ ஒரு சாத்திரி இருந்துவிட்டு வந்துவிட்டால் குடி முழுகிப்போனதென்ன? இப்படிப் போனவளென்று முகத் தில் எழுதிப் பட்டயங் கட்டியா விடுகிருர்கள்?

ருக்மிணி, தங்கள் பேச்சுக்கும் என் அபிப்பிராயங் களுக்கும் வெகு தூரம் அரைக் காசுக்கு அழிந்திட்ட கற்பு ஆயிரம் மரக்கால் பெர்ன் கொடுத்தாலும் வருமா? மான

இ-5.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/32&oldid=660412" இலிருந்து மீள்விக்கப்பட்டது