பக்கம்:இராஜேந்திரன்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 இராஜேந்திரன்

மழிந்த பின் வாழாமை முன்னினிதே' என்று பெரியோ; சொல்லி இருக்கிருர்கள். பெண்களாகப் பிறந்தவர்கள் எவ்வளவு ஆபத்து வந்தபோதிலும் தங்கள் கற்பைக் காப்பாற்ற வேண்டுமென்றும் அப்படிச் செய்யச் சாத்தியம் படாவிட்டால் பிராணத்தியாகஞ் செய்துகொள்வதுதான் சிலாக்கியமென்றும் தர்ம சாஸ்திரத்திற் சொல்லியிருக்க வில்லையா? -

ரங்கம்மாள்: நீ சொன்ன தர்ம சாஸ்திரத்திலேயே ஆ ப த் துக்குப் பர்பமில்லையென்றும் சொல்லியிருக்க வில்லையா?

ருக்மிணி: எ ன து அபிப்பிராயம் என்னவென்ருல் பெண் இப்பேர்ப்பட்ட அக்கிரமம் செய்துவிட்டுப் பிராணனே வைத்திருப்பதைவிட, அவள் மானத்தை இழக்காமல் பிராணத் தியாகஞ் செய்துகொள்வதே சிலாக்கியமாகும் என்பதுதான்.சாகத் துணிந்தவர்களுக்குச் சமுத்திரம் முழங் காலென்று சொல்லுவார்கள். தமது சொந்தக் கண வரிடத்திலேயே எவ்வளவோ சங்கோஜமும் பின் வாங்குகை யும் சகஜமாக நேரிடக்கூடியதாயிருக்க, அம்மம்மா! இவர்கள் எப்படித்தான் அங்கிய ஆடவர்களிடத்தில் கற்புக் கெட மனம் ஒப்புகிருர்களோ தெரியவில்லை. சிச்சி! ரீரங்கம் ஏதோ பெருந் திவ்விய கேத்திரமென்றும், 108 திருப்பதிகளில் முதன்மை பெற்றதென்றும், அதில் சில தினங்கள் இருந்து போவதால் கெடுதல் இல்லையென்றும் கினைத்திருந்தேன். இவ்விடத்தில் நடக்கும் அக்கிரமங்களே நினைப்பதற்குக்கூட என் தேகம் நடுங்குகின்றது. கோவில் பரிசாரகர்களில் பலர் சற்றும் சன்மார்க்கஸ்தர்களாய் இருக்கக் காணுேம். அவர்களெல்லாம் நமது வீட்டிற்கு வருகிறதையும், அவர்களிடம் தாங்கள் ரகசியமாக என்னேச் சுட்டிக் காட்டிப் பேசுவதையும், அவர்கள் காட்சி சாலையில் புது ஜந்துவைக் காண்பதுபோல் என்னைப் பார்த்துவிட்டுச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/33&oldid=660413" இலிருந்து மீள்விக்கப்பட்டது