பக்கம்:இராஜேந்திரன்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரதrதிணையின் அலங்கோலம் 4}

கோபண்ணு: நான் தங்களே முதலில் இந்த 2000 ரூ. கொடுக்கும்படியாவது அல்லது அதை வாங்க 4000 ரூ. கொடுக்கும்படியாவது நல்ல வார்த்தை சொல்லவில்லை. உத்தரவு கொடுத்தால் உடனே போய்விடுகிறேன்.

ராஜா. தாங்கள் கோபம் செய்துகொள்ள வேண்டாம். தாங்கள் சொன்ன செட்டியாரிடம் உண்டியல் பேரில் கேட் டால்தான் அப்படிச் சொல்லுவார். இதோ இந்த இரண்டு வைர மோதிரங்களே அடமானம் வைத்துக் கேளுங்கள். அப் போது கியாயமான வட்டிக்குக் கொடுப்பார்கள்.

கோபண்ணு: உண்மைதான் கைகள் வைத்தால் செட்டிகளுடைய கியாயமான வட்டி நூற்றுக்கு மூன்று தான். ஆல்ை நான் சொல்லி நூற்றுக்கு 2 வீதம் வாங் கிக் கொடுக்கிறேன்.

இப்படிச் சொல்லி அவர்களே அழைத்துப் போய் வைர மோதிரங்களே வைத்து அவர்களேயே கையெழுத்துப் போடச் சொல்லி 2000 ரூபாய் கடன் வாங்கும்படி செய்து வீட்டிற்கு வந்தபின் அந்த ரூபாய்களே வாங்கிக் கொண்டு ரூபாய் 1200 மட்டும் பெற்றதாகக் கூறி ரங்கம்மா ளிடம் கொடுத்து அன்றைய ராத்திரி தாம் கொடுக்கும் மருந்தை ருக்மிணிக்குத் தரும்படியும் மருந்து சாப்பிட்ட அரை மணி நேரம் பொறுத்துத் தம் ஜாகைக்கு அழைத்து வரும்படியும் சொல்லிவிட்டுக் கோபண்ணு போய்விட்டார்.

ருக்மிணி தனக்கு ஏற்பட்ட விசனத்தால் ரங்கம்மாள் எத்தனே தரம் கூப்பிட்டாலும் தனக்குச் சாப்பாடு வேண்டா மென்று சொல்லிவிட்டாள். ராத்திரி 8 மணியானதும் காபி வைத்து, காபியில் கோபண்ணு கொடுத்த மருந் தைப் போட்டு, ருக்மிணியைச் சாப்பிடச் சொல்லிக் கட் டாயப்படுத்தினதன்பேரில் ருக்மிணி சாப்பிட்டாள். சுமார் அரைமணி நேரம் பொறுத்ததும் ருக்மிணி ஒருவித மயக்க மாக இருப்பதாகச் சொன்னுள். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/40&oldid=660420" இலிருந்து மீள்விக்கப்பட்டது