பக்கம்:இராஜேந்திரன்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புத்திரனின்சேந்திப்பு 63

களது மணியாளிடத்தே காணப்படும் ஒருவகைச் சக்திப் பிர பாவத்தினுல்தான். தாய்க்குப் பின் தாரமாக அம்மடல் லாள் ஊட்டும் உற்சாகத்தில்-ஆதரிப்பில்-அரவணைப் பில் அவன் எவ்விதக் கஷ்ட கிஷ்டுரங்களேயும் ஏற்றுச் சகித்தற்கான வல்லமை பெற்றவன் ஆய்விடுகிருன். பிரதி யொரு மனிதனுக்கும் இத்தகைய சக்தி உண்டுபண்ணு வதே விவாகத்தின் உள் கோக்கம். இவ்வாருன சக்தி யொன்றினே ஒருவன் அடையப் பெற்றிருந்தும் பிராரப்த கர்மவசத்தால் அதனே இழந்து விடுவாகிைல் நமது கதா நாயகனின் கதிதான் அவனுக்கும்.இந்த அபூர்வ சக்தியின வரதகழினே யென்னும் சுழற்காற்றில் அலங்கோலப்படுத் துவது ஹா என்ன கொடுமை! கண்ணசாவி!!

முந்தின. அத்தியாயத்திற் கண்ட சம்பவங்கள் நடக் தேறிய மூன்று வருஷங்கள் வரையிலும் ராஜேந்திரன் லெளகிக சுகங்களே உதறின் சந்நியாசிபோல் உலகத் தையே வெறுத்த ஞானியாகத் தோன்றுவதானன். எக்த விதமான காரியங்களிலும் அவனுக்குச் சிங்தை செல்ல வில்லை. தன் உயிரினும் அருமையாக ஒரு காலம் போற்றிய புஸ்தகங்களெல்லாம் கரையான் அடித்துப் பாழானதையும் அவன் கவனித்தானில்லே. தனது அபரிமிதமான சொத் துக்களிலிருந்து வந்துகொண் டிருந்த ஏராளமான வரு மானத்தையேனும் அவற்றின் செலவுகளேயேனும் கண் னெடுத்தும் பார்ப்பதில்லே. காரியஸ்தர் யோக்கியரானபடி யால் இதைப் பல தடவைகளில் கேட்டுப் பார்த்து, அவரது இஷ்டம்போல் சகல நடவடிக்கைகளேயும் கடத்தச் சொல்லி விட்டதாலும் அவரால் கூடியவரையில் தேற்ற முயன்றும் முடியாததாலும், வேறு வழியின்றி, தாமே எல்லா கடவடிக் கைகளேயும் எவ்வளவுக்குச் சுருக்கமாய்ச் செய்யக்கூடுமோ அவ்வளவுக்கு முயன்று கிர்வகித்து வந்தார். போஜன. காலங்களில் மட்டும் அவர், ராஜேந்திரன் என்ன விதமாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/62&oldid=660442" இலிருந்து மீள்விக்கப்பட்டது