பக்கம்:இராஜேந்திரன்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புத்திரனின் சந்திப்பு §5

ஒரு வியாபாரம் ஆரம்பித்து அதற்கு ராகவன் முதல் ஒன் றும் போடாவிட்டாலும் அவரையும் அதில் சமபாகஸ்தராக் இச் சகல நடவடிக்கைகளேயும் ராகவனக்கொண்டே நடத்தி வந்தார். அப்போதுகூட ராகவன் கட்டாயப் படுத்துவதற்காக ராஜேந்திரன் பாங்கிக்குக் குறித்த வேளே யில் வந்து போவதே தவிர, உண்மையாக என்ன வியா பாரம் நடக்கிறதென்றும், பாங்கிக்கு எவ்வளவு லாபம் வந்த தென்றும், அவர் தெரிந்துகொள்ள முயலவில்லை. ராகவ னுடைய சாமர்த்தியமான நிர்வாகத் திறமையால் பாங்கி யின் வியாபாரம் பெருகி வரவே, சென்னேயிலுள்ள பிரசித்த மான பாங்குகளில் ருக்மிணி பாங்கும் ஒன்றென்றும், அது மிகச் சிறந்ததென்றும், அதிக ஐசுவரியம் உடையதென் றும் எங்குமே பிரக்யாதி உண்டாயிற்று.

இவ்வாறு பதின்ைகு வருஷங்கள் சென்ற பின்னர் அந்தப் பாங்கியில் இருந்துகொண்டு இதுகாறும் ரூபாய் ஆள் கொடுத்து வாங்கி வந்த காஷ்கிப்பர் என்ற முக்கிய உத்தியோகஸ்தர் இறந்து போர்ை. அவருக்கு அடுத்த படியிலிருந்த இரண்டாவது காஷ்கிப்பரை அவ்வேலைக்குக் இகாண்டு வர ராகவனுக்கு நம்பிக்கை இல்லாததால் இஷ்டமில்லை. ஆகவே தக்க ஜாமீனுடன் தகுந்த ஆள் வேண்டுமென்று பத்திரிகைகளில் விளம்பரம் செய்தார்கள். ருக்மிணி பாங்கியில் பெருத்த லேவாதேவி செய்யும் பினுங்கிலுள்ள பாங்கியார் தக்க மனிதனே அனுப்புவதாகத் தந்தியடித்தார்கள். தந்தி வந்த பத்து நாட்களுக்குப் பின் அமார் 18-வயதுடைய ரங்கநாத் என்பவர் பினங்கு பாங்கியி லிருந்து சிபார்சுக் காகிதமும் ரொக்க ஜாமீன் கொடுப்பதற். காக உண்டியல் காகிதமும் கொண்டுவந்து கொடுத்து முதல் காஷ்கீப்பர் வேலேயில் அமர்ந்தார். அவர் வயது இளவயதாயிருந்தாலும் நல்ல யோக்கியரென்றும் வேலை யில் கெட்டிக்காரரென்றும், எல்லோருக்கும் நல்லவரென்

இ-5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/64&oldid=660444" இலிருந்து மீள்விக்கப்பட்டது