பக்கம்:இராஜேந்திரன்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓர் ஆச்சரியமான திருட்டு 73

பெரிதும் கவலை செலுத்த வேண்டியவனுயிருக்கிற அந்த ஒரு காரணம் பற்றியே, அவ்வொரு கடமையை முன்னிட்டே, நான்தங்களிடம் கட்டாயமாய்ப் பேசித் தீர வேண்டியவனுய் இருப்பதால் தாங்கள் என்னிடம் கோபித்துக்கொள்ளாமல் மனம் பொறுத்துச் சாந்த மாய் நான் சொல்லும் விஷயங்களே முற்றும் கேட்கு மாறு மிகவும் வேண்டிக்கொள்ளுகிறேன்.தயவு செய்து தங்களுக்கு ஆட்சேபம் இல்லாவிடில் நாளே 12-மணிக்கு நமது பாங்கியின் காரியஸ்தலத்தில் காம் இவ்விஷயத் தைப்பற்றிப் பேசிப் பரஸ்பரம் ஒருவர் கருத்தை ஒரு வர் அறிந்துகொள்வது நலமாயிருக்கும், தயவு செய்து என் மைேபீஷ்டத்தை நிறைவேற்றும்படி மன்ருடிக் கேட்டுக்கொள்ளும்,

தங்கள் பிரிய கண்பன், ராகவன்.'

இக்கடிதத்தை ராஜேந்திரன் வாசித்துப் பார்த்த தும் ராகவன் விரும்பிக் கேட்டபடி மறுநாள் 13.மணிக்குச் சந்திப்பதாய் வாக்களித்து அப்படியே வந்து சேர்ந்தார். உடனே ராகவன் ரொக்கம் கொடுத்து வாங்கும் முக்கிய வேலைக்காரரான ரங்கநாத்தையே சகல வேலைகளேயும் ஒரு மணி நேரத்திற்கு கடத்திக்கொள்ளச் சொல்லிவிட்டு ராஜேந்திரனுடைய அந்தரங்க அறைக்குட் சென்று பேச ஆரம்பித்தார்.

ராஜேந்திரன்: ராகவா, என்ன என்றுமில்லாத புது மாதிரியாகக் கடிதம் எழுதினயே; ஏன் என்ன விஷயம்?

ராகவன்: நண்பரவர்களே! நான் சொல்லப்போகும். விஷயம் தங்கள் மனத்திற்குச் சற்று வருத்தத்தை உண் டாக்குமென்று நான் நன்கறிவேன். அப்படியிருந்தும் தங்களிடம் உண்மையைக் கூறித் தங்கள் யோசனேயைக் கேட்டே இனி நடக்க வேண்டுமென்று கட்டாயமாக எனக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/78&oldid=660458" இலிருந்து மீள்விக்கப்பட்டது