பக்கம்:இராஜேந்திரன்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 இராஜேந்திரன்

இன்றைத் தினம் மட்டும் தம்மைக் கூப்பிட வேண்ட, மென்றும், மறுநாள் முதல் தாம் ஊக்கத்துடன் வேல் செய்வதாயும் சொல்லி ராகவனே வழக்கம்போல் வியாபா ரத்திற்கு அனுப்பிவிட்டு, ராஜேந்திரன் எகாந்தமாய் ஆழ்ந்த சிந்தனேயில் ஆழ்ந்திருந்தார். மூன்றே முக்கால் மணியானதும் பூரீனிவாசன் வருவதாய் மறுமொழி சொல்லியனுப்பியதாகச் சொல்லி, ராஜேந்திரனேப் பக்கத்து அறையில் போயிருக்கும்படி ஏற்பாடு செய்துவிட்டு ராகவன் மட்டும் அங்கே உட்கார்ந்து வேலை செய்துகொண் டிருந் தார். சரியாய் நாலு மணி அடித்தவுடன் பூரீனிவாசன் தன் பேரடித்த சிட்டை அனுப்பின்ை. ராகவன் உடனே உள்ளே வரும்படி சொல்லி, பூரீனிவாசன் வந்தவுடன் எழுந்துபோய் அவனே அழைத்துவந்து ஆசனத்தில் உட்காரச் சொன்னர்.

யூரீனிவாசன்: ஐயா! கட்டாயமாய் நாலு மணிக்குத் தங்களே வந்து சந்திக்கும்படி தாக்கிதனுப்பினிர்களே! எதற்காக தாங்கள் என் பிதாவின் நண்பராயிருந்தாலும் நான் இந்த வியாபாரத்திற்குச் சொந்தக்காரன் என் பதையும் ஆகையால் தங்களுக்குக்கூட எஜமானன் என் பதையும் கவனியாமல் ஒரு நாடோடியை வரும்படி எழுதின தைப்போல் எனக்குத் தாக்கிது அனுப்பினிர்களே! தாங் கள் அப்படி எழுதியது சரிதான? -

ராகவன்: ஐயா! தாங்கள் எனது கண்பரும் எனது எஜமானருமாகிய ராஜேந்திரனுடைய புத்திரரென்பதற்கும் ஆகையால் நான் தங்களுடைய வேலைக்காரனென்பதற்கும் யாதொரு ஆட்சேபமும் இல்லை. தங்களுடைய நன்மையை உத்தேசித்தே சில விஷயங்களேத் தங்களிடம் பேசவேண்டிய தற்காக வரும்படி தங்களுக்கு எழுதினேன். நானே தங்க ளிடம் வந்திருப்பேன். ஆனல் வேறு அசெளகரியத்தினுல் தங்களே இங்கே வரவழைக்க நேரிட்டது. அதற்காக மன்னிக் கும்படி கேட்டுக்கொள்ளுகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/85&oldid=660465" இலிருந்து மீள்விக்கப்பட்டது