பக்கம்:இராஜேந்திரன்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 இராஜேந்திரன்

ராஜேந்திரன், சற்று கிதானிக்கச் சொல்' என்று சொன்னர். அதற்குச் சேவகன், 'ஐயாf என்னல் எவ் வளவு தூரம் தாமதிக்கச் சொல்லக் கூடுமோ அவ்வளவு தூரம் சொன்னேன். அவர் தாம் சரியாய்ப்பத்தரை மணிக்கு வருவதாக முன் கூட்டித் தெரிவித்திருப்பதாகவும் தாம் தாமதிக்க முடியவே முடியாதென்றும் தடயுடலாய்ச் சொல் வதோடு இன்னும் கேவலமான வார்த்தைகளும் சொல்லு கிறார். -

“தாங்கள் அவருடன் பேசி அவரை அனுப்பிவிட்டால் நல்லதென்று நினைக்கிறேன். பாங்கியில் வந்திருப்பவர் களிடமெல்லாம் அவர் நமது பாங்கியைப்பற்றி இழிவாய்ப் பேசுவதற்கு எனக்கு அவரை மென்று தின்று விடக்கூடிய கோபம் வந்தது. தாங்கள் கோபித்துக்கொள்ளுவிர்க ளென்று நான் இதுவரையில் பொறுத்திருந்தேன்; ஆகை யால் சீக்கிரமாய்த் தாங்கள் பார்த்துப் பேசி அந் தச் சனியனே அனுப்பிவிடுங்கள். இல்லாவிட்டால் எனக்கு உத்தரவு கொடுத்தால் மாடிமேலிருந்து தூக்கித் தெருவில் எறிந்து விடுகிறேன். இனி அவர் ஒரு நிமிஷமேனும் இங் கிருக்கக்கூடாது' என்று சொன்னன்.

அந்தச் சேவகன் ராஜேந்திரன் சிறு பிள்ளேயாயிருக் கும்போது அவரை எடுத்து வளர்த்து வந்த பழைய காள் வேலேக்காரணுதலால் ராஜேந்திரனிடம் கபடமற்றுச் சகஜமாய்ப் பேசுவது வழக்கம். ராஜந்திரன், 'பாங்கியைப் பற்றி என்ன இழிவாய்ப்பேசினர்' என்று கேட்டார்.அதற் குச் சேவகன், “பேர் பெரிய பேரே யொழிய காரியத்தில் ஒன்றும் பிரயோஜனம் இல்லையென்றும், இப்பாங்கியில் ரூபாய்கள் வைத்திருக்கப் பயந்தே தாம் தம் ஐந்து லட்ச ரூபாய்களே அன்றே வாங்கிவிடத் தீர்மானித்து விட்டதாயும் இப்போது தாமதிப்பதைப் பார்த்தால் அதுவும் கொடுப் பார்களோ வீண் சால்ஜாப்புகள் சொல்வார்களோ என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/93&oldid=660473" இலிருந்து மீள்விக்கப்பட்டது